தீராத காயங்களும் மாறாத வடுக்களும்

105

வாழ்தல் இல்லை. ஏனெனில் வாழ்வுக்கான சுகந்திரம் இல்லை. எங்கு பார்த்தாலும் இராணுவம், இராணுவமுகாம் அகற்றப்பட்ட இடங்களில் எல்லாம் சிவில் உடையில் இராணுவ உளவாளிகள் என, மக்கள் நமக்கேன் வம்பு என ஓட்டுக்குள் முடங்கியிருக்கும் ஆமைபோல, வாழ்க்கையை செலுத்துகிறார்கள். வெளிநாட்டுக்கு தெரியும் அளவிற்கு உங்கள் பெயர் அடிபட்டால், உங்களை அவ்வளவாக ஒன்றும்செய்யமாட்டார்கள், செய்தால் வெளிநாடுகளுக்கு தெரியவந்து பிரச்சனையாகப்போய்விடும் என்று. சாதாரண மக்களின் பாடு, அதுவும்வாழ்க்கை வசதியில்லாவிட்டால் அவ்வளவுதான். அவர்களுக்கு ஒன்று நடந்தால் கேட்பார்கள் இல்லை. மண்குடிசையில் அவர்களின் நியாயத்தைக் கேட்டு நீதி கொடுப்பாரும் இல்லை. இதுவரைக்கும் கோட்டுக்கு போய், தண்டணை வழங்கப்பட்டது என்று எத்தனை இராணுவவீரர்கள் உள்ளார்கள்?

மன்னிப்போம், மறப்போம் என்று அடித்தவன்சொல்லக்கூடாது. அடிவேண்டியவன் சொல்லவேண்டும், அதற்கு அவன் அடித்தவன், திருந்திவிட்டான், தன்பிழையை உணர்ந்து அதற்குஉரிய பாவவிமோசனங்கள் செய்கின்றான், இவனை மன்னிப்பது தகும் என உணரவேண்டும். அப்படியான சூழலை உண்டுபண்ணி நிவாரணம் தேடுவதைவிடுத்து, புனர்வாழ்வு என்ற பெயரில் அடிவேண்டியவனை திருந்த வெளிக்கிடுவது எவ்வளவு கண்துடைப்பு, உண்மையில் பார்த்தால், தமிழருக்குகொடுக்கும் அற்பசொற்ப சலுகைகளுக்கும், விசாரணையின்றி வருடங்கணக்காக சிறையில்வாடுபவர்களை விடுவிக்க வேண்டாம் என்றும் எதிராகப் போர்கொடி  தூக்கும் பௌத்த பிக்குகளுக்கும், சிங்கள பேரினவாதிகளுக்கும் தான்புனர்வாழ்வு, கட்டாயம் அவசியம்.

செந்துராரனின் மரணம் சாதாரணமானதல்ல. அடுத்த தலைமுறையின் ஆற்றாமையின் வெளிப்பாடு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற அவனின் நியாயமான கோரிக்கையை அரசு செவிசாய்க்க வில்லை. விடுவிக்கப்பட்ட கைதிகள் சாதராண வாழ்கை வாழத்தொடங்கியதும் ஒரு சிலர் மர்மமான முறையில் இறந்துள்ளார்கள். அதுபற்றிய சரியான விபரம் இல்லை. அன்று ஆயுதப்போராட்டம் தொடங்கியது கூட, கேட்பவர்கள்கேட்கவேண்டிய நேரத்தில் தமிழர் நியாயமான கோரிக்கையை கேட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கத்தவறிய இடத்தில்தான்.தலைவர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகின்றார்கள். சரித்திரம் மாறாது, சந்ததி மறக்காது. மறக்கவும் இவ்சிங்கள அரசு விடாது ஆகவே இப்படியே இருந்தால், எதிர்காலத்திலும்தலைவர்கள் உருவாக்கத்தான் போகின்றார்கள்.

நல்லாட்சியும், அரசியல் சாசன சீர்திருந்தங்களும், சர்வதேச தலையீடும், நல்ல காலம் வருகின்றது எனக் குடு குடுப்பைக்காரன் சொல்வது போல அந்தா வருது, இந்தா வருது என்றுசொல்வதும், என்னடா நல்ல காலம் வருகின்றது என்று சொன்னாலும் தமிழர் சந்தோசம் படுவதாகத்தெரியவில்லை என்று அங்கலாய்ப்பதும் உண்மையில் தமிழர் பார்வையில் கேலிக் கூத்து நடத்துவது போன்றது. தமிழருக்கு இப்போ தேவையானது காரணம் இல்லை, காரியம். சொல்லாடல் இல்லை, செயல் தீரம், அதை செய்து காட்டி அவர்கள் நம்பிக்கையைப் பெற இவர்கள் முயர்ச்சிக்க வேண்டும்.

தமிழ் பட்டதாரிகள் வெளியேறி 5 வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது வேலை எடுப்பதற்கு, மீள் குடியேற்றம் என்றபெயரில் எல்லைப்புற காடுகள் அழிக்கப்பட்டுதமிழர் பகுதி இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன, சிங்களக்கிராமங்களாக உருப்பெருகின்றன. தமிழரின் வளமான நிலங்கள் அபகரிக்கப்பட்டு மீள் குடியமர்வு என்ற பெயரின்வளம் அற்ற கட்டாகாணிகள் தமிழ் மக்களுக்குகொடுக்கப்படுகின்றன. இராணுமுகாம் மிகப்பரந்த நிலப்பரப்பை ஆக்கிரமிக்கின்றது. வன அழிப்புக்கு இராணுவமும் துணைபோகின்றது. காலநிலை சமனிலையின்மைக்கு இது வழியமைகின்றது. ஆதனால் இயற்கை அழிவுகளையும் தமிழர் தாயகம் எதிர்நோக்குகின்றது.

மிகப்பெரிய இனவழிப்பை எதிர்கொண்ட தமிழ் இனத்தை இனி மிகச்சுலபமாக ஏமாற்றமுடியாது. தொட்டால் சுடுவது நெருப்பென்றால் இரண்டாம் தடவை குழந்தை கூடத்தொடமாட்டாது. இனி வெள்ளைக்கொடியோடு ஒருவரும் சரணடையப் போகப்போவதில்லை.கணவர்மாரையும், பிள்ளைகளையும் விசாரணை என்று ஒருவரும் வழி அனுப்பி வைக்கப்போவதில்லை. அரசியல் சாசனங்களையும், உடன்படிக்கைகளையும், வெளிநாட்டு பிரதிநிதிகள் வந்து போவதையும் இட்டு யாரும் அலட்டிக்கொள்ளப்போவதில்லை. எமது உடனடித் தேவை, சொல்வதும், எழுதுவதும் அல்ல, செயல்படுத்துவது, கைதிகள் விடுதலை, சித்திரவதை முகாகங்கள் பற்றிய உண்மை, எமது பரம்பரை நிலம், எமது வீடு. எமது காணி, எமது தரை, கடல்வளங்களின் பாதுகாப்பு, இராணுவ வெளியேற்றம், மக்களின் வழமையான இயல்பான வாழ்கைமுறை.

பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. யாரும் எந்த நேரமும், விசாரணையின்றி கைது செய்யப்படலாம். காலவரையின்றி தடுப்புக்காவலில் வைத்திருக்கிலாம். ஊடக சுகந்திரம் இல்லை. காணாமல் போனவர்கள் சம்பந்தமாக ஒரு தகவலும் இல்லை. தனது காணாமல் போன மகள், மைத்திரியின் பாடசாலை விஜயத்தில் மைத்திரியோடு காணப்படுவதாக, ஒரு தாயார் சொல்லிமுறைப்பட்டு இருநதும் அதுபற்றி அரசுதரப்பில் இருந்து இதுவரை ஒரு தகவலும் இல்லை.கைதிகள் உண்ணாவிரதம் இருந்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை. அவர்கள் உயிர்கள் அரசின் கையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அரசு ஓன்றும் பெரிதாகக்செய்ய தேவையில்லை. நல்லெண்ணத்தை (நல்ல எண்ணங்களை) செயலில் காட்டினால் போதும். எழுத்தும், எண்ணுவதும் ஆழமான காயங்களையும், வடுக்களையும் மாற்றப் போதுமானவையல்ல. புரிய வேண்டிவர்களுக்கு புரிந்து இயங்கினால் சரி.