ஒரே நாளில் 1000 வரை பேர் பலி, நாடு முழுதுவதும் நெருக்கடி, ICUல் நலமுடன் பிரிட்டிஷ் பிரதமர்

64

பிரித்தானியாவில் நோய்தொற்றுக்கு உள்ளார்னோர்களில் இறப்பவர்களின் சதவீதம் சடுதியாக அதிகரித்தவண்ணம் உள்ளது.இதுவரை 77456 பேர்கள் கொரானா பொஸிட்டிவ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 7096 பேர் இறந்துள்ளனர்.நேற்று மட்டும் 1000 பேர் பலியாகியுள்ள நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் ICUல் குணமடைந்துள்ளார்.

மேலும் கொவிட் 19 பரிசோதனைகளுக்காக பெருந்தொகை மக்கள் தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் வைத்தியசாலைகளில் நெருக்கடி நிலைமை நிலவுகின்றது,இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் ஏற்பாடுகளில் உறவுகளுடன் சுகாதாரதுறையினருக்கு பிணக்குகள் ஏற்பட்டு வருகின்றன.