அன்னை பூபதியின் 29 ம் ஆண்டு நினைவு நினைவு வணக்க நிகழ்வானது 29/04/2017 அன்று தமிழர் ஒருங்கிணைப்பு குழு லேய்ஸ்ட்டர் பிராந்திய பகுதியினரால் முன்னெடுக்கப்பட்டது. வணக்கநிகழ்வானது தமிழர் ஒருங்கிணைப்பு குழு வெளி மாவட்ட இணைப்பாளர் திரு நவம் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றலோடு ஆரம்பமானது தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு லேய்ஸ்ட்டர் பிராந்திய பொறுப்பாளர் திரு மனோ அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகை சுடரினை லெப்.பன்னீர் செல்வம் அவர்களின் சகோதரி கண்ணகி அவர்கள் ஏற்றி வைத்தார் . திருவுருப்படத்திற்க்கான வணக்கத்தினை மலர்மலையாக கப்டன் பருதி அவர்களின் மைத்துனர் திரு ரஞ்சன் அவர்கள் தொடங்கிவைக்க பொதுமக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மலர்வணக்கம் மற்றும் சுடர் வணக்கத்தினை செய்தார்கள்.
வணக்க நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ஈழப்போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு உறுதுணையாயிருந்தவரும், லேய்ஸ்ட்டர் ஈஸ்ட் பிராந்திய MP KEITH VAZ அவர்கள் இணைந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் , அன்னை பூபதியின் சிறப்பு உரையினை திரு அர்னகுமார் மற்றும் மைக்கல் வினோ ஆற்றி இருந்தார்கள் தொடர்ந்தும் ஈழம் நோக்கி வீறு கொண்டு நட சிறுவர்களது நடனமும் சுவேதா , ரெனிதா ஆகியோரின் அன்னை பூபதியின் தியாகம் பற்றிய கவிதையினை தொடர்ந்து மயூரன் சதானந்தன் அவர்களின் ஈழத்து பாடலோடும், நிகழ்வானது தமிழீழ தேசிய கொடி கை எந்தலோடு நிறைவு அடைந்தது
தகவல் + படங்கள் : அசோக்