இராணுவப்பலத்தில் தமிழர்படை மேலோங்கி நின்றமையை உலகிற்கு வெளிப்படுத்திய பாதை திறப்பு. (08.04.2002)

248

இலங்கையின் மொத்த சனத்தொகையில் சிங்களர்களின் (67%) வீதத்தின்படி அவர்களிடமிருந்த படைவலுவிற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளின் படைவலுவிற்கும் உள்ள வித்தியாசம் யாரும் சொல்லி அறிய வேண்டியதல்ல.

உலக இராணுவப் பலத்தை ஆய்வுசெய்வதற்கென்று சில பொது விதிகளுண்டு.
ஓர்நாட்டின் இராணுவக்கணக்கெடுப்பிற்கும் மக்கள் தொகைக்கும் தொடர்பிருக்கிறது. இராணுவப்பலம் கணக்கெடுக்கப்படும்போது, வெளிநாட்டில் தரித்திருக்கின்ற இராணுவமும் கணக்கெடுக்கப்படும். குறுகியகால பொதுச்சேவையாளர்கள் (Volunteers) கணக்கெடுக்கப்படுவதில்லை. அதேபோல துணைஇராணுவக்குழுவும் (Paramilitary ) கணக்கெடுக்கப்படும்.

உதாரணமாக இலங்கையின் தற்போதைய இராணுவஆட்பலம் 255,000 நபர்கள் என்றால் துணை இராணுவநபர்கள் 92,600 நபர்களாக இருக்கிறார்கள். ஏறக்குறைய 300,000 பேர் என வைத்துக்கொள்வோம்.

பாதை திறப்பின்போது சிங்களத்தரப்பில் 185,000 படைவீரர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய நாட்களில் இலங்கைக்கு ஆயுத மற்றும் தொழில்நுட்ப வழங்கல்,மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியா , இசுரேல், பிரித்தானியா, யப்பான் ஆகிய நாடுகள் முதன்மைபெறுகின்றன.

உலக இராணுவப்பலத்தில் இலங்கை தொடர்ச்சியாக 82 – 85 வது இடங்களைத் தக்கவைத்துவருகிறது. இராணுவப் பலத்தை ஆய்வுசெய்யும்போது கீழ்வரும் தகுதிகள் ஆய்வுசெய்யப்பட்டே தகுதிநிலை அறிவிக்கப்படும்.

போர்த்திறன் – combat capability (war fighting in pursuit of national interests)

தாக்குதல்களை வழிநடத்தும் திறன் – the potential to conduct operations across the spectrum of (and increasingly below) actual war fighting;

போர்ச் சமநிலையைத் தக்கவைத்தல் – maintaining balanced combat, combat-support and combat-service-support capacity;

எல்லைக்கு வெளியேயான போர்த்திறன் – the range or distance at which operations can be conducted away from home territory

 

நடவடிக்கைகளை விரைவாகக் கையாளும் அல்லது தலையிடும் திறன் – the ability both to surge for rapid intervention and to support enduring operational requirements over extended periods of time.

மேலுள்ள தகுதிகள் அனைத்தையும்கொண்டிருக்கும் , அதுவும் ஐக்கியநாடுகள் அமைதிகாக்கும் படையில் அங்கம் வகிக்கும் இலங்கை இராணுவத்தை, மிகக்குறைந்த ஆளணிவளமும் எந்தநாட்டினதும் பொருளாதார அல்லது ஆயுத உதவியுமற்று சொந்த மண்ணின் மக்கள் பலத்தோடு, சொந்த மக்களின் உதவியை வைத்துக்கொண்டு இன்னொரு நாட்டினது இராணுவம் அடித்துத் துவம்சம் செய்தால் அந்த இராணுவமும் அங்கீகரிக்கப்பட்டே ஆகவேண்டும்.

அதே வகையில் இலங்கை அரசும், உலக அரசுகளும் இணைந்து தமிழர்படைகளை மறைமுகமாக அங்கீகரித்த நாளே இதுவாகும்.

மேலுள்ள தகுதிகளின்படி இலங்கை அரசைவிட பலவிதங்களில் விடுதலைப்புலிகள் மேலோங்கி நின்றமையை உலகம் மறந்திருக்காது.

தமிழர் சேனையிடமிருந்த வீரமும், போர்த்திறனும் இலட்சிய உறுதியும், தியாகமனப்பான்மையும் உலகில் வேறெந்த இராணுவத்திடமும் இல்லை என்பதே எமது பெருமை.

-தேவன்