யார் செத்தாலும் அழ வேண்டுமா?

69

மக்களிலிருந்து தோன்றி,மக்களிற்காக வாழ்ந்த உயர்ந்த தலைவர்களை வரலாறு தன் பக்கத்தில் தம் அன்புக் குழந்தைகளாக பதிந்துதான் பயணிக்கின்றது.

தமிழீழத்தின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து,

தம் உறவுகள் வதைபடும் அவலம் கண்டு,

படைதிரட்டி, போர் புரிந்து தமிழீழ தனியரசை நடைமுறைப்படுத்திய ஒருவனை தம் நிரந்தர தமிழின தேசியத்தலைவராக தமிழினம் ஏற்றுக்கொண்டது ஒன்றும் ஆச்சரியமில்லை.

ஒரு சிறந்த மனிதனாக, ஒப்பற்ற பெரும்போர்வீரனாக இலட்சியத்தளம்பல்கள் அற்ற ஒரு தலைவனாக வாழ்ந்த எம் தலைவனைத்தேடி தமிழினத்தலைவர்கள் வன்னி சென்ற பொற்காலங்கள் தமிழின வரலாற்றின் பெருமைக்குரிய காலங்கள் என்பதில் தமிழினம் கர்வம் கலந்த பெருமைகொள்கின்றது.

தமிழின விடுதலை என்பதற்குள் மலையகத்தமிழ் மக்களின் அவலங்களிற்கான அரசியல் தீர்வுகளும் அடக்கப்பட்டிருந்ததுடன் , மலையகத் தமிழ்மக்களின் தலைவர்களும் தேசியத்தலைவரை அன்று ஏற்றுக்கொண்டு அரசியல்பயணத்தை தொடர தயாராகவிருந்தார்கள்.

உலகமெங்கும் வாழும் தமிழினத்தின் அந்தந்த பிரதேச தலைவர்களும் தேசிய தலைவரின் ஆளுமையினால் ஈர்க்கப்பட்டு அவருடன் சேர்ந்து கரம்கோர்த்து பயணிக்க தயாராகவே இருந்தார்கள்.

பல ஆயிரம் வருட தமிழினவரலாற்றின் ஒப்பற்ற தலைவனையும், அவனின் படைக்கட்டமைப்புக்களையும் சர்வதேச உதவியுடன் இந்தியமும், சிங்களமும் சேர்ந்தே அழித்த அந்த தினத்திலிருந்து தமிழின அவலம் ஆரம்பமாகியது.

இனவழிப்பு அரசுடன் சேர்ந்து , சலுகைகளிற்காக விலைபோன ஆறுமுகம் தொண்டமானிலிருந்து,

புலிகளின் ஆயுதப்போராட்டம் தவறென இன்று சிங்களத்துடன் சேர்ந்து நயவஞ்சக அரசியல் செய்யும் சுமந்திரன் வரை தமிழின அரசியற்பரப்பு துரோகங்களாலும்,வஞ்சகங்களாலும் நிறைந்துகிடக்கின்றது.

மக்களிற்காகவே , மக்களுடன் வாழ்ந்து,

தன் குடும்பம் முழுவதையுமே மக்களிற்காகவே மண்ணில் விதைத்த மாவீரன் பிரபாகரன் அவதரித்த அதே மண்ணில்தான் , தமிழினத்தை கூறுபோட்டு விற்கும் கேவலமான பல தமிழ்த்தலைவர்களும் தோன்றியதுதான் தமிழினத்தின் பெரும் துயரம்.

சபிக்கப்பட்ட இனம் தமிழினம்..

ஆறுமுகம் தொண்டமானின் இழப்பை நாம் வெறும் ஒரு நிகழ்வாக கடந்துசெல்வது ஒன்றே அவரின் அரசியல் வெறுமையினை காட்டிநிற்கின்றது..

அன்பரசன்