பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த ஹயஸ் வானின் ரயர் வெடித்ததில் வந்த வேகத்தில் வீதியை விட்டு விலகி தென்னை மரத்துடன் மோதி காணிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் 12.30 மணியளவில் நீர்வேலி கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.வானில் பயணித்தவர்கள் காயங்கள் இன்றி தப்பித்தனர். வான் கடுமையாக சேதமடைந்துள்ளது.ரெலிகொமிற்கு சொந்தமான வான் அம்பாறையில் இருந்து வருகைதந்ததாக கூறப்படுகிறது.
அன்பு நெஞ்சங்களே,நீங்கள் இன்று கண்ணை மூடி கொண்டு காட்டும் வேகத்தில் நீங்களும் சரி வீதியில் வரும் எவரும் கொல்லப்பட வேண்டிய நிலைமை இருக்கின்றது.சரியான திட்டமிடல் இன்மையும்,குறைந்த நேரத்தில் கூடிய இலாபத்தை எதிர்பார்த்தலுக்குமாக இவ்வாறு பல உயிர்கள் வீணாகின்றன.நீங்கள் இறந்தாலே நாளையே உங்களிடத்துக்கு ஒருவர் புதிதாக வர போகும் தொழிலுக்காக நீங்கள் உங்கள் உயிரை ஏன் பணயம் வைக்கிறீர்கள்? நிதானமாக வாழுங்கள்.இயற்கையில் எதுவுமே ஒரே நாளில் ஏற்பட்டுவிடுவதில்லை,எல்லாமே மிக பொறுமையான செயற்பாடுகள் மூலமே வளர்ச்சியடைகின்றன..ஒரு நாளில் மரம் வளர்வதில்லை.மனிதர்கள் மட்டும் ஏன் அற்ப வாழ்வு,இருக்கும் போதே நிம்மதியில்லா ஓட்டம்