எட்டு பேரைக் காணவில்லை பிரான்ஸ் நகரமொன்றில்…

81

பிரான்ஸ் முக்கிய நகரமொன்றில் எட்டு பேரைக் காணவில்லை, புரட்டியெடுக்கும் அலெக்ஸ்!

பிரான்ஸை அலெக்ஸ் என்று பெயரிடப்பட்ட புயல் புரட்டி எடுத்து வருகிறது. Nice நகரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், குறைந்தது எட்டு பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது,

சில இடங்களில் 24 மணி நேரத்தில் 450 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது நான்கு மாதங்களில் பெய்யும் மழை அளவுக்கு சமமாகும்.

இதேபோல், 2015ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3ஆம் திகதி பிரான்சில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் cannes நகரிலும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் 20 பேர் உயிரிழந்தார்கள்.

ஆனால், இந்த மழை அப்போது பெய்த மழையின் அளவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.