அடேய்… நண்பர்களே

173

உங்களோடு
உண்ட உணவுகளையும்
கண்ட கனவுகளையும்
கொண்ட கொள்கைகளையும்
கண்ட களங்களையும்

ஏன்..
கண்ட காயங்களையும்
மறந்து வாழ்வது என்றால்
அந்த நாள்
எனக்கு செத்தழிந்த நாளே ஆகும்.

தலைவன் அருகில் ஆடிய காற்றுக்கள்
நாங்கள் அவன் விதைத்த நாற்றுக்கள்

அண்ணன் அருகோடு கதை பேசி சிரித்தோம் .
ஆனால் கந்தகமாய் மாறும் போது மட்டும் எனை தனித்து விட்டு சென்றீர்.

வெல்லும் வரை செல்வோம்
அல்லது வீழும் வரை செல்வோம்

நாளை நமக்கொரு நாடு பிறந்திடும்
நம்பி இருந்திடுங்கள்.

உங்கள் கனவுகளை சுமந்த வண்ணம் தான் உடல் உயிரை சுமக்கிறது ..

துயில் கொள்ளுங்கள் நண்பர்களே.
வானம் மழை தூவும் அப்போ கண் திறவுங்கள்

ஒன்று வென்று இருப்போம்
அல்லது அருகிருப்போம் .

நீ சுமந்த அனைத்தும் நாம் சுமப்போம்
சுமைகள் கனதி என்றாலும்
இனத்துக்கு ஆனதால் சுகமாய் தான் உள்ளது…

…கதிர் ஈழம் ..