கொரோனா அழியாத் தழும்புகளை விட்டுச்செல்லும்!

89

வயதானவர்களையும் உடலில் நோய் எதிர்ப்பு குறைந்தோர்களையுமே கொரோனா வைரஸ் தாக்கும் என்ற எண்ணத்துடன் இன்னும் பயமின்றி வெளியில் சுற்றுபவர்களுக்கு மருத்துவ ஆய்வு அறிக்கைகளின் எச்சரிக்கை.

உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா.

கொரோனாவின் ஆட்டம் என்றாவது குறைந்தாலும் அதன் தாக்கம் நிற்கப்போவதில்லை என்று எச்சரிக்கின்றன கொரோனா மீது தீவிர ஆய்வு செய்துகொண்டிருக்கும் ஆய்வு நிறுவனங்கள்.

கொரானாவில் இருந்து மீண்ட சுமார் மூவாயிரத்திற்கும் மேலானவர்களை கொண்டு ஆய்வு செய்தபின் மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்வது இதுதான்.

கொரோனா பாதித்த உடலில் நுரையீரலையும் தவிர்த்து மற்ற உறுப்புகளும் கொரோனாவின் எதிர்மறைத் தாக்கத்துக்கு உட்படுகின்றன.

இது நீண்டகால நீடித்த விளைவை உண்டுபண்ணும்.

Dr. Harlan Krumholtz கூற்றுப்படி
ஆக்ஜீஸனை ரத்தத்தில் கலக்கும் நுரையீரலின் திறன் 25% குறைகிறது.

ஈரலின் சுத்திகரிப்புத் திறன் 40% குறைகிறது.

இதயம் பலகீனமடைகிறது, 12% இதயத்துடிப்பு சம்பந்தமான குறை உருவாகிறது.

Heart, liver, kidney, brain , endocrine மற்றும் blood systemகூட வைரஸின் எதிரமறைத்தாக்கத்திற்கு உட்படுத்தப்படுகிறது.

இதயத்தின் செயல்தினைக் குறைத்து அதன் பகுதிச் சதைகளை வழுவிழக்க செய்கிறது்

உடலில் பல்வேறுபகுதிகளில் anti phospholipid antibody எனும் immune protein திட்டுத்திட்டுக்களாய் உறைகிறது.

இது ரத்த திட்டுக்களை (blood clots) கால்களில் கை மூட்டுக்களில், நுரையீரலில் மற்றும் மூளையில் உருவாகச் செய்கிறது.

கொரோனா தாக்கிய உடலில் இந்த வைரஸ் மாதக்கணக்கில் / சிலசமயங்களில் வருடக்கணக்கில் கூட செயலற்ற நிலையில் (dormant stage) தங்கிவிடவும் வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கொரோனாவின் முன்னோடி வைரஸ்கள் இதை ஊர்ஜிதம் செய்கின்றன்.

பெரியம்மை தாக்கிய உடலில் herpes virus பத்து இருபது வருடங்கள் இருந்து தன் வேலையைக் காட்டும்.

ஹெபாடிடிஸ் B பாதிக்கப்பட்டவர்களில் 50% க்கு மேலாக liver cancerஇருக்கும்.

எபோலா பாதித்தவர்களுக்கு 40% மேலானவர்கள் கண் பார்வைக் குறைபாடு நோய் வரும்.

SARSக்கு தாக்கப்பட்வர்கள் பெரும்பாலானோர் பத்து வருடங்களுக்குப் பிறகும்கூட சுவாசக் கோளாறு நோய்க்கு ஆட்பட்டவராக இருப்பர்.

MERSஆல் தாக்கப்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானோருக்கு lung fibrosis இருக்கும்.

வருமுன் காப்போம்.

கூட்டத்தில் இருந்து தனித்திருப்போம்.

தாக்கம் குறையும்வரை பொறுத்திருப்போம்.

அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்போம்.

இல்லாதவர்களுக்கு ஏழைகளுக்கும் முடிந்தால் நேரிடையாகவும் தன்னார்வத் தொண்டு நட்புக் குழுக்கள் மூலமாகவும் முடிந்தவரை உதவிடுவோம்.

இது தகவலுக்காகவே எனவே தைரியமாக எதிர்கொள்வோம்.

நன்றி:
Dr Harlan Krumholtz Cardio
Dr Joseph Brennan
Dr Qwen Tsang Director of infectious disease
Dr Kim Williams
Dr Bharathi
Justin Arockiyaraj kosa Jebaraj

Mahi Krc / Jeya balan