ஏலியன்கள் உஷார்…

156

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது திடீரென்று பல்டி அடித்த பப்புனவ ஏலியன் என்றேன். என்னை சகட்டு மேனிக்கு திட்டி நட்பை துண்டித்து கொண்டீர்கள். திமுக ஏலியன் சேனாதிபதிக்கும் துணை நின்றீர்கள்.. வேதனை

தமிழி ஆராய்ச்சி டாக்குமென்டரி எனும் பெயரில் தமிழனுக்கு எழுத்துரு என்பது இல்லவே இல்லை முழுக்க முழுக்க அது ஏலியன்களின் பிச்சை.. அதாவது பாகிஸ்தான் ஏலியன் முதல் பல்லவ ஏலியன் வரை போட்ட பிச்சை என்று விஷக் கருத்தை விதைத்து விட்டு. வெளியில் தெரியாமல் இருக்க ஏலியன் தனது சொந்த குரலில் பாடலை பாடி பூசிமொழுகி இருந்தது.. அப்போதும் அந்தப் பத்து எபிசோடை பற்றி எழுதியிருந்தேன்.. வழக்கம்போல் என்னை திட்டி நட்பை துண்டித்து கொண்டீர்கள்..

இனி அப்படி நடக்கப் போவதில்லை.. ஏனென்றால் ஏலியனே தன்னை ஏலியனென்று பாட்டு பாடி சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டது. இனி அதனால் தலை தூக்கவே முடியாது. மக்கு ஏலியன்

இங்கு சிக்கல் அந்த ஏலியன் அல்ல இவை போன்ற பல ஏலியன்கள் இருக்கிறது இனியும் வரப்போகிறது. ஆனால் அவைகளை நம்பி அதன் பின் சென்று தாங்கள் வைத்த நம்பிக்கை தான் சரி என்று கண்மூடித்தனமாக நம்பி அதனை எதிர்த்து என்னை போன்றவர்கள் கேள்வி எழுப்பினால்.. திட்டி நட்பை துண்டித்து போகும் அரைவேக்காடு தமிழ்தேசியர்களை நினைத்தால்தான் கோபம் கோபமாக வருகிறது..

இனியேனும் திருந்துங்கள் இவர்கள் போன்றவர்களை அடையாளம் காணுங்கள்.

இன்று ஹிப்ஹாப் ஏலியன் வெளிவந்துவிட்டது இதேபோல ஏலியன் செல்வர், டான்ஸ் ஏலியன், ஏலியன் ரெட்டி,, ஏலியன் தோழர், கலர் சட்டை ஏலியன், சமூக சேவக ஏலியயன் எனப் டிசைன் டிசைனா ஏலியன்கள் இருக்கிறது.. ஜாக்கிரதை இது ஏலியன் சூழ் உலகு

இனிவரும் காலங்களில் நாம் ஏலியன் என்ற சொல்லை பெரிதும் பயன்படுத்தப் போகிறோம் இதற்கு வித்திட்ட ஹிப்ஹாப் ஏலியனுக்கு நன்றிகள்.. அவர் கூறுவது போல நாம் எந்த ஏலியணையும் வண்டி ஏற்ற அவசியமில்லை.‌ நாம் அந்த ஏலியன் வண்டியில் ஏறாமல் இருந்தால் போதும்..

இவண்

இங்கர்சால் நார்வே