அமீர் சொன்ன பொய்,ஆனாலும் அது எமக்கு பிடிச்சிருக்கு!

66

அண்மையில் மரணமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகள் விடுதலைப் புலிகள் இயக்க தலைவருக்கு ஜாமீன் பெற்று தன் இடத்தில் தங்கவைத்து உதவி செய்தார் என இயக்குனர் அமீர் கூறியிருக்கிறார்.

நான் அறிந்தவரையில் அமீர் கூறியது தவறான செய்தி. ஆனாலும் அவர் அவ்வாறு கூறியது ஒருவழியில் எமக்கு மகிழ்வு தருகிறது.

ஏனெனில் 12 வருடம் சட்டமன்ற உறுப்பினராகவும் திமுக மாட்ட தலைவராகவும் இருந்தவருக்குகூட ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்தார் என்பதை கூறி பெருமை சேர்க்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது அல்லவா!

எந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று இந்திய அரசு ஒவ்வொரு வருடமும் தடையை நீடித்து வருகிறதோ அந்த இயக்கத்தின் தலைவருக்கு உதவியதாக கூறி பெருமை தேட வேண்டிய நிலை ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கே ஏற்பட்டுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமாகிய ஜீ.வி. பிரகாசிடம் யாராவது ஒருவர் வாழ்வை ஒருநாள் வாழ சந்தர்ப்பம் கிடைத்தால் யாருடைய வாழ்வை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்டபோது தயக்கமின்றி ஒருவர் பெயரை அவர் குறிப்பிட்டார்.

அவர் குறிப்பிட்ட அந்த ஒருவர் பெயர் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன். இந்த பெயரைக் கூறுவதால் அவருக்கு எந்த சலுகையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக இந்திய அரசின் நெருக்கடிகளே கிடைக்ககூடும். ஆனாலும் அவர் தைரியமாக கூறியிருக்கிறார்.

பயங்கரவாதிகள் என்று எந்த திலீபன் , பாலச்ந்திரன் போன்றவர்களை இந்திய அரசு கொன்றதோ இன்று அவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டிற்கே வந்துவிட்டார்கள்.

ஆம். பெட்டிக்கடைகளின் பெயர்கள், வாகனங்களில் அவர்கள் படம், பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் என எங்கும் எதிலும் அவர்கள் வந்துவிட்டார்கள்.

இப்போது புரிகிறதா, ஏன் இந்திய அரசு தமிழர்களை கண்டு அஞ்சுகிறது என்று?

நன்றி Tholar balan