அமெரிக்காவில் தொடரும் கறுப்பின படுகொலை,கேள்குறியாகும் சமத்துவம்?

104

கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து,நீதி கோரி அமெரிக்க மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.21ம் நூற்றாண்டிலும் தொடரும் அமெரிக்காவின் நிறபாகுபாடுகள்,கறுப்பின மக்களுக்கு எதிரான பலவிதமான நெருக்குவாரங்கள் அதிகரித்த நிலையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.மக்கள் போராட்டங்களினால் நிலைகுலைந்துள்ள அரசு,மேலும் காவல்துறையை தூண்டி விட்டுள்ளதுடன்,கோரானாவை காரணம் காட்டி நீர்த்து போக செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.இது முற்றுமுழுதான கறுப்பின படுகொலையாகதா பார்க்கப்பட வேண்டும்,மொத்தமாக கொன்றால்தான் இனப்படுகொலையா? ஒன்று ஒன்றாக கொன்றால் இனப்படுகொலை இல்லையா? உலக மக்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதே சிறந்தது

உலகம் முழுதும் போராடும் இனகுழுக்களுக்கு வன்முறையால் தீர்வு காணமுடியாது பேசி தீர்த்துகொள்ளுங்கள் என போதிக்கும் அமெரிக்கா,இதுவரை தனது எந்த சொந்த பிரச்சினைகளையும் பேசி தீர்த்து கொண்டதாக தெரியவில்லை.அமெரிக்காவில் வருடத்திற்கு சராசரியாக 1000 மக்கள்,காவல்துறையினால் சுட்டு கொல்லப்படுகின்றனர்.2020ல் இதுவரை 214 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.இது தவிர பல நாயகள்,மற்றைய சிறு மிருகங்களையும் அமெரிக்க காவல்துறை சுட்டு கொன்றுவருகின்றன.இந்த மாதிரி ஒரு அரசிடமிருந்து போராடும் இனகுழுக்கள் நீதியை எதிர்பார்ப்பதும்,படித்த கனவான்கள் அமெரிக்காவை முன்மாதிரியாக கொண்டு வரிக்கு வரி பேசுவதும் வேடிக்கையாக இருக்கின்றது.

படுகொலை செய்யும் காட்சி