அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன்: வாழ்க்கை பயணம் முதல்… அரசியல் பயணம் வரை….

அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது முயற்சியாக முதலிடத்துக்கு தகுதி பெற்றிருக்கிறார் ஜோ பைடன். ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலைகள் ஒன்றிரண்டு தசாப்தங்கள் அல்ல. 1987ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2008ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் அதிபராகும் போட்டியில் இருந்த அவரால், தனது 77ஆவது வயதில்தான் அப்பதவிக்கான போட்டியில் முதலிடத்துக்கு முன்னேற முடிந்திருக்கிறது.

ஜோ பைடனின் வசீகர வார்த்தைகள், அனுதாப பார்வை

எளிய தேர்தல் பரப்புரை, மக்களை கவர்ந்திழுக்கும் வசீகர வார்த்தைகள், அனுதாப பார்வையுடன் அடித்தட்டு மக்களை அணுகும் போக்கு ஜோ பைடனுக்கு அமெரிக்க வாழ் மற்ற பிற நாட்டு வம்சாவளியினர் இடையே ஆதரவை பெருக்கியது. தாழ்மையுடன் நடந்து கொள்ளும் அவரது உயர் பண்பு, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்புக்கு நேர்மாறானது.

ஒபாமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்தபோது, அவருடன் இரண்டு பதவிக்காலங்களிலும் துணை அதிபராக பணியாற்றியிருக்கிறார் ஜோ பைடன். அத்துடன் அரசுப்பதவிகளில் தொடர்ச்சியாக 40 ஆண்டுகால அனுபவத்தை அவர் பெற்றிருந்தார்.

அரசு மற்றும் அரசியல் உயர் பதவிகளை வகித்தபோதும், தனது பலம் மேல்தட்டு, கார்பரேட் சமூகங்களை விட அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள்தான் என்பதை ஜோ பைடன் உணர்ந்திருந்தார். ஒபாமாவை கருப்பினத்தவர் ஆக அமெரிக்கா பார்த்தபோது அவர் அதிபராக போட்டியிட்டபோது, அவருக்கு கரம் கொடுக்கும் முகமாக வெள்ளையினத்தவரான ஜோ பைடன் தேர்தல் களத்தில் துணைந்து நின்றார். ஒபாமா பெற்ற வெற்றியில் இவரது பங்களிப்பு அதிகம் என்பது அமெரிக்க அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. அது இரு தேர்தல் முடிவுகளில் பலிக்கவும் செய்தது.

2012ஆம் ஆண்டில் ஒரு பாலினத்தவர் திருமணத்தை பைடன் ஆதரித்தபோது, அதுவரை சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்ட இந்த விவகாரத்தில், அதிபராக இருந்த ஒபாமாவே மவுனம் சாதித்த நிலையில், துணிச்சலுடன், என்னைப் பொருத்தவரை நிச்சயமாக பிரச்னையில்லை என்று குரல் கொடுத்தார் பைடன். அவரது கருத்து சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக வெளிவந்தன.

அவரது குரலின் தொடக்கம் தான் பின்னாளில் அதே விவகாரத்தில் ஒபாமாவும் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

பொது நிகழ்ச்சிகளில் எல்லோரிடமும் எளிமையாக பழகும் பண்பு, அரவணைத்தல், நலம் விசாரித்தல் போன்ற குணங்கள், அவரை மிடில் கிளாஸ் ஜோ என்றே பலரும் அழைக்க காரணமாக அமைந்தது.

ஜோ பைடனின் அரசியல் வாழ்க்கை

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆறு முறை செனட்டர் ஆக இருந்திருக்கிரார் ஜோ பைடன்.

1972ஆம் ஆண்டில் டெலவேர் மாகாணத்தில் இருந்து முதல் முறையாக செனட்டர் ஆனார் பைடன். 1988ஆம் ஆண்டில் அதிபர் வேட்பாளர் பதவிக்கு உள்கட்சி அளவில் நடந்த தேர்வின்போது அப்போதைய பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி தலைவர் நீல் கின்னாக்கின் உரையை தகவல் திருட்டு செய்த சர்ச்சையில் சிக்கினார்.

அப்போது `என் முன்னோர்கள் பெனிசில்வேனியாவில் வடகிழக்குப் பகுதியில் நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்த்தார்கள்” என்று பிரச்சாரங்களில் அவர் கூறத்தொடங்கினார்.

தங்களுக்கு உரிய வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை என்று அவர் கோபமாக காட்டினார்.

ஆனால் அவருடைய முன்னோர்கள் யாருமே நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்க்கவில்லை. பிரிட்டன் அரசியல்வாதி நீல் கின்னோக் என்பவருடைய உரையில் இருந்து அந்த வரியை (மற்றும் பல வரிகளை) அவர் எடுத்து பயன்படுத்தியுள்ளார். கின்னோக்கின் உறவினர்கள் உண்மையிலேயே சுரங்கத் தொழிலாளர்களாக இருந்தனர்.

பிறகு தனது தவறை ஒப்புக் கொண்ட பைடனுக்கு, நிதானம் தவறும் போக்கு காரணமாக அந்த வாய்ப்பு அவருக்கு பறிபோனது என கூறுவார்கள். “ஜோவின் வெடிகுண்டுகள்” என கூறப்பட்ட பலவற்றில், முதலாவது விஷயமாக அது பார்க்கப்பட்டது.

தன்னுடைய அரசியல் அனுபவம் பற்றி 2012-ல் பெருமையாகக் குறிப்பிட்ட பைடன், ஒரு கூட்டத்தில்,

ஆப்பிரிக்க – அமெரிக்கர்களில் தெளிவாகப் பேசும், பளிச்சென்று, சுத்தமாக, நல்ல தோற்றம் உள்ள முதலாவது முக்கிய நபராக இருக்கிறார்” என்று ஒபாமா பற்றி கூறியதன் பிறகும் அவருக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது.

இந்த கருத்துக்குப் பிறகும், இப்போதைய தேர்தலையொட்டி கட்சி ரீதியிலான வேட்பாளர் தேர்வுக்கான வாக்கெடுப்பில் பைடனுக்கு ஆதரவாக கருப்பர் இனத்தவர்கள் அதிகமாக வாக்களித்தனர்.