நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்குப்போடுங்கள்!
கோத்தபாயவுக்கு போடப்போறியா போடு!
ரணிலுக்கு போடப்போறியா போடு!!
சுமந்திரனுக்கு போடப்போறியா போடு!!!
இல்லை கஜேந்திரகுமாருக்கு போடப்போறியா போடு!!!!
யாருக்கு வேண்டுமானாலும் போடு!!!!
அது உன் விருப்பம்! அது உன் உரிமையும் கூட!!
ஆனால் ஒன்றுமட்டும் உறுதி,
நீ எதை விதைக்கிறாயோ… அதைத்தான் அறுவடை செய்வாய்!!
அதை நீ மட்டுமல்ல… உன் பிள்ளைகள் மட்டுமல்ல… உன் பேரப்பிள்ளைகளையும் தாண்டி, உன் பரம்பரையே அனுபவிக்கும்.
நீ யாருக்கு வேண்டுமானாலும் உன் வாக்கைப்போடு!
அது உன் விருப்பம்! உன் உரிமை!!
அதை அவனுக்குப் போடு இவனுக்குப் போடு எனச் சொல்பவனின் மண்டையில் ஒரு போடு போடு!!
வெளிநாட்டில் இருந்துகொண்டு
சம்மந்தனுக்கு போடு சுமந்திரனுக்கு போடு கஜேந்திரனுக்குப்போடு என கூவுறதுகள் எல்லாம் ஜாலியா அவங்கள் நாட்டில இருப்பாங்கள்!
நீதான் வேகப்போகிறாய்!!
யாருக்கு வேண்டுமானாலும் வாக்குப்போடு!
அதை நல்லா யோசிச்சுப்போடு!! அதன்பின் அதனால் வரும் அத்தனை இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கும் ஏகபோக உரிமை உனக்கும் உன் பரம்பரைக்கும் மட்டுமே!!!
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்குபோடுங்கள்!!!
உங்களில் ஒருவன்
#இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2020
நன்றி Ami amirtharaj