அமிர்தலிங்கம் விஜயகுமார் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

465

அமிர்தலிங்கம் விஜயகுமார் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

தமிழ் மக்களினதும் தமிழீழத்தினதும் விடிவிற்காக புலம்பெயர்ந்த மண்ணில் அயராது செயலாற்றி வந்த சிறந்த தாயகப்பற்றாளர் ஒருவரை நாம் 01-11-2020 அன்று பிரித்தானியாவில் இழந்துவிட்டோம்.

‘கிளியன்’ என்று அன்பாக அழைக்கப்பட்ட திரு. அமிர்தலிங்கம் விஜயகுமார் அவர்கள் தாயகத்தில் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வசித்த காலத்தில் எமது விடுதலைப் போராட்டத்துக்குத் தன்னாலான உதவிகளைச் செய்து வந்திருந்தார். பிரித்தானியாவுக்கு நிரந்தரமாகக் குடியேறிய பின்னரும் தனது தாயகப்பணிகளை முழு வீச்சாக மேற்கொண்டிருந்தார்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் புலம்பெயர்ந்த தளத்திலும் தாயகத்திலும் எமது விடுதலைப் போராட்டத்துக்கும் தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் அயராது உழைத்து வந்தார். போராடிய சமூகத்தின் மேம்பாட்டுக்காக தன்னால் இயன்றளவுக்கு தொடர்ந்தும் உதவி வந்தார். வெளித்தெரியா வண்ணம் இவராற்றிய பணிகள் எமது விடுதலைப் போராட்டத்துக்கு உரமாகின.

தாயக விடுதலையையும், தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டையும் அதிமுக்கிய கடமையாக வரித்துக்கொண்டு பல்வேறு வழிகளில் உளப்பூர்வமாகப் பணியாற்றிய ஆதரவாளர் கிளியன் அவர்களின் தேசப்பணியை நினைவுகூர்ந்து
‘நாட்டுப்பற்றாளர்’ என்று எமது இயக்கம் அவருக்கு மதிப்பளிக்கிறது.

“தேச விடுதலை எனும் உன்னத இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. எமது நெஞ்சத்து நினைவலைகளில் அவர்கள் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்கள்” என்று எமது தேசியத் தலைவர் இயம்பியதற்கிணங்க இவர்கள் தமிழ்மக்கள் மனத்தில் என்றும் நிலைத்து நிற்பார்கள்.

நாட்டுப் பற்றாளர் அமிர்தலிங்கம் விஜயகுமார் அவர்களின் பிரிவால் வாடும் அவரது மனைவி> பிள்ளைகள்> உற்றார்> உறவினர் அனைவரின் துயரோடு நாமும் பங்கு கொள்கின்றோம்.

தமிழ் மக்கள் மீதும் தமிழீழத் தேசத்தின் மீதும் ஆழமான பற்றுறுதியோடும் அர்ப்பணிப்போடும் செயற்பட்ட இவர் போன்றோரின் இலட்சியக் கனவுகள் ஈடேற தொடர்ந்தும் நாம் உறுதியோடு போராடுவோம்.

-நன்றி-
-புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்-

நாட்டுப்பற்றாளர் கிளியன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு அறிவித்தல்

மன்னார் கள்ளியடியை பிறப்பிடமாகவும் பிரித்தானியா – நோர்த்தம்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  
நாட்டுப்பற்றாளர் அமிர்தலிங்கம் விஜயகுமார் (கிளியன் ) 01-11 -2020  ஞாயிற்றுக்கிழமை அன்று மாரடைப்பால் சாவடைந்தார்.
அவரது இறுதி வணக்க நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை 08/11/2020 அன்று காலை 9:00 மணி தொடக்கம் 1:30 மணி வரை உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் (OX17 3NX MILL FARM HOUSE BANBURY – Oxford)
அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் நடைபெறும். தொடர்ந்து மாலை 4.00 – 5.00 வரை
Hendon crematorium
Holders hill road London
NW7 1NB எனும் இடத்தில் தகனக்கிரிகை இடம்பெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
நன்றி.

நிர்வாகம்
உலகத் தமிழர் வரலாற்று மையம்
ஐக்கிய இராட்சியம்.
தொடர்புகளுக்கு
அப்பன்-07546939508
சதா – 07990736233
வரலாற்று மையம் – 07539 127771