அம்பிகை அம்மாவின் போராட்டம் மகத்தானது.

105

அவரது போராட்டம்தான் புலத்தில் மட்டுமல்ல தாயகத்திலும் சமகாலத்தில் நடைபெறும் தொடர் போராட்டங்களுக்கான உந்து சக்தியாக இருக்கிறது.

அத்தோடு உலக பயங்கரவாத அரசுகள் ஒன்றிணைந்து எமக்கு ஜெனிவாவில் வைத்து மீண்டும் அநீதி இழைத்ததை தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து எதிர்த்தோம் என்ற வரலாற்று செய்தியும் இதன் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளது .

இவைதான் இதன் முக்கியத்துவம். ஆனால் சிலர் குறிப்பான எந்த மாறுதலும் இல்லாமல் இன அழிப்பு அரசிற்குச் சாதகமாகவே நிறைவேறப் போகும் ஒரு தீர்மானத்தை வரலாற்று வெற்றி/ புரட்சி என்று புகழ் பாடுவது கவலையளிக்கிறது.

இனி தீர்மானத்தில் எந்த மாறுதலும் செய்ய முடியாது என்ற ஒரு கட்டத்தில் அவரது உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஒரு நிலையில் உலகத் தமிழர்களினது வேண்டுகோளுக்கமைய அவரது போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதான் உண்மை.

அம்பிகை அம்மாவின் போராட்டம் நோக்கத்தில் வெற்றியடையவில்லை. ஆனால் வரலாற்றை சரியாக எழுதுவதில் வெற்றி கண்டுள்ளது.

அதை அப்படியே வரலாற்றில் பதிவு செய்வதுதான் அறம் – அதுதான் எமக்கான அரசியலும் கூட.

வரலாற்றை மறைப்பதோ , திரிப்பதோ எமக்கு என்றும் உதவப் போவதில்லை.

நந்திக்கடலில் வைத்து தலைவர் இறுதியாக உச்சரித்தது இதைத்தான்.
“வெற்றி, தோல்வி முக்கியமில்லை. நாம் அடுத்த தலைமுறைக்கு தெளிவான வரலாற்றையே விட்டுச் செல்ல வேண்டும்”

இதுதான் தலைமுறை கடந்து போராட உந்து சக்தியாக இருக்கும்.

https://www.facebook.com/100033576233268/posts/387205612408643/