அணையா விளக்கு அன்னை பூபதித்தாய்!

278

“உன் துப்பாக்கி மிரட்டல்களுக்கெல்லாம் இந்தப்பூபதி அசைமாட்டாள்” என்கிறார் அன்னை பூபதி களைத்துப்போன அந்த முகத்தில் உறுதியும் தீரமும் பளிச்சிடுகின்றன.
உடல் களைத்ததே தவிர உள்ளம் களைக்கவில்லை.

மட்டக்களப்பின் நகரின் பல பகுதிகளிலும் இந்தியப்படைகள் முகாம்கள் அமைத்துத் தங்கியிருந்துகொண்டு சொல்லமுடியாத கொடுமைகளைச் செய்தன.தேடுதல் வேட்டை என்ற பெயரில் வீடு வீடாகப்புகுந்து வெறித்தாண்டவம் ஆடினார்கள்.உடைமைகள் சூறையாடப்பட்டன.வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.சந்தேகத்திற்குரிய இளைஞர்கள் உடனடியாகச் சுட்டுக்கொல்லப்பட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய இராணுவத்தினர் பெண்களிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டனர்.பெண்கள் வெளியில் நடமாடவே அஞ்சினர்.

மட்டக்களப்பு வெள்ளைப்பாலத்தில் நடந்துபோய்ககொண்டிருந்த இரு இளம்பெண்களை இந்திய இராணுவச் சிப்பாய்கள் விரட்டிப்பிடித்து அருகில் இருந்த கடைக்குள் இழுத்துச்சென்று பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினார்கள்.இச்செய்தி நகரமக்களை அதிர்ச்சியடைய வைத்தது.இத்தகைய கொடுமைகளை இனியும் பொறுத்திருக்கமுடியாதென தாய்மார்கள் கொதித்தெழுந்தனர்.

தியாகி திலீபன் காட்டிய வழியில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவதென அன்னையர் முன்னணி முடிவு செய்தது.

வரலாற்றின் வழித்தடத்தில்…..