அங்கஜன் அண்ணாவின் குசும்பு…

1111

யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற அங்கயன்,அவர்கள் விளம்பரங்கள் தேர்தல்செலவுக்களுக்காக சுமார் 8 கோடிகளை செலவிட்டுள்ளார்.சிறிலங்காவில் சஜித் பிரேமதாசவுக்கு அடுத்து அதிகமாக செலவிட்ட அரசியல்வாதி அங்கஜனே ஆவார்.

சிறிலங்கா பாராளுமன்ற எம்பிக்கு மாதாந்த கொடுப்பனவு 60000 ரூபாய்கள் மட்டுமே,அதனை தாண்டிய சில கொடுபனவுகள் இருந்தாலும்,அடுத்த 5 வருடத்துக்கான மொத்த சம்பள வருமானம் ஒரு கோடிக்குள் மட்டுமே வருகின்றது.ஆனால் அங்கஐன் அண்ணா 8 கோடிகளை இதற்காக செலவிட்டுள்ளார்.

இதன் மூலம் அரசியல் பதவி மோகம் எவ்வளவுக்கு ஒருவரை ஆட்டி படைக்கின்றது என்பதுடன்,அதன் பின்னணி வியாபார யுக்திகள்,வருமானங்கள் கணக்கு தொடர்பாகவும் ஒரு தெளிவு பிறக்கின்றது.எப்படியும் 8 கோடிக்கு குறையாது.