ஆங்கிலேயர் வியந்த தென்னாசியாவை ஆண்ட சர். அண்ணாமலை செட்டியாரின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாறு

203

தெற்காசியாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த குடும்பத்தின் தலைவர்..

இவரது குடும்பதினருக்கு உலகளாவிய வல்லாதிக்க அரசுகளோடும் அரச குடும்பங்களோடும் இருந்த உறவும் நெருக்கமும் உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாதது..!

பர்மாவில் இவருக்கு சொந்தமாக ஒரு லட்சம் ஏக்கர் வேளாண் விளை நிலங்கள் இருந்தன..

(கருணாநிதி ஒரு தேர்தலில் தமிழ்நாட்டு விவாசாயிகள் எல்லோருக்கும் சேர்த்து அரசு தருவதாக சொல்லியதே மொத்தம் ஒரு லட்சம் ஏக்கர் தான்)

இந்தியன் வங்கியைத் தோற்றுவித்தது இவர்தான்..

இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளில் இவருக்கு சொந்தமாக மொத்தம் 100 வங்கிகள் இருந்தன..(100 கிளைகளல்ல வெவ்வேறு பெயர்களில் 100 வங்கிகள்)

காரைக்குடி கானாடுகாத்தானிலுள்ள இவர் வீடான செட்டிநாடு அரண்மனைக்கு செல்வதற்காவே ஆங்கிலேய அரசு தொடர்வண்டி பாதையில் நிறுத்தமொன்றை ஏற்படுத்தியது..!

இவர் குடும்பத்தினர் வருவதற்கு தாமதமானால் தொடர்வண்டி அவர்கள் வரும் வரை நிற்குமாம்..!

உலகையே ஆண்ட இங்கிலாந்து அரச குடும்பத்தோடு இவர் குடும்பத்தினருக்கு இருந்த உறவை ஒரேயொரு நிகழ்வின் மூலம் அறியலாம்..!

இந்திய விடுதலைக்குப் பிறகு இவருடைய வாரிசான எம்.ஏ.முத்தையா செட்டியாரின் அழைப்பை ஏற்று ராணி எலிசபெத் தனது கணவரோடு செட்டிநாட்டு அரண்மனைக்கே வந்து விருந்தில் கலந்து கொண்டனர்..! அதன் பிறகு எதற்காகவும் ராணி கணவரோடு இந்தியா வரவில்லை..!

நீண்ட காலத்திற்குப் பிறகு கமலுடைய மருதநாயகம் பட தொடக்க விழாவில் கலந்து கொள்ள இந்தியா வந்த ராணி எலிசபெத் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாட்டு அரண்மனையில் தான் தங்கினார்..!(சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முழுக்க இவர்களின் குடும்ப சொத்துதான்)

பர்மாவில் இவருடைய குடும்ப சொத்தில் ஜப்பானிய படையினர் கை வைத்த பிறகுதான் அமெரிக்காவின் போர் விமானங்கள் அணுகுண்டுகளை சுமந்து கொண்டு ஜப்பான் வான்வெளியில் வட்டமிட்டன..! (அதுகுறித்து விவரமாக பின்னர் எழுதுகிறேன்)

(கொசுறு செய்தி: ராஜா சர் அண்ணாமலை செட்டியார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தாய்வழி தாத்தா..!)

ஆரல்கதிர் மருகன்