அன்றொரு நாள் அவர்கள் வருவார்கள்

305

என்றொரு நாள்
எம் மக்கள்
எதிர்பார்க்கும்
அன்றொரு நாள்
அவர்கள் வருவார்கள்

அன்னை நிலம் காயும்
அசுத்தமாய் ஆறு பாயும்
திண்ணை மனை
எல்லாம் தினம் தினம்
பிணம் வீழும்
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

மெல்லவாய் தமிழ் சாகும்
மெதுமெதுவாய் உயிர் போகும்
சிங்களம் குடி ஏறி
சிதைக்கும் தமிழ் வாழ்வை
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

கன்றுகளைப் பசு தின்னும்
பசு முலையை நாய் உண்ணும்
நரிகள் உயிர் கொண்டு
நாடேல்லாம் பிணம் ஆகும்
அன்றொரு நாள் அவர்கள் வருவார்கள்

காவலுக்கு நின்ற வேலி
கட்டாயம் பயிர் மேயும்
ஆவலாய் பகை வந்து
ஆன்மாவை பங்கு போட
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

கர்ப்பிணி பெண் கூட
கற்பிழந்து கதறிடுவாள்
நற்றமிழ் நிலம் எங்கும்
நரி நடனம் ஆடி நிற்க
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

பிஞ்சுகள் கருகி விழும்
பிதிர்கள் உருகி அழும்
சிதையுண்டு தமிழ் மெல்ல
புதையுண்டு போகாது
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்.

நிச்சயம் நடக்கும் இது
நியம் சொல்லும் வரிகள் இது
பயம் போக்கி தமிழ் வாழ்வு
பண்போடு மேல் ஓங்க
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

கற்பனை கதை மற்றும்
கனவில் வந்த கவிதை அல்ல
சிங்கள நரி நாய்கள்
சிதைக்கும் எம் இனத்தை
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்.

வென்றொரு நாள்
வந்துங்கள் கண்முன்னே
வித்தாய் விதையுடலாய்
விடுகதையாய்
அன்றொரு நாள் அவர்கள் வருவார்கள்

உலகம் வியந்து நிற்க
உணர்வுகள் உறைந்து நிற்க
தேசம் வென்றுங்கள் கையில்
தருவதற்கே
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

காற்றாய் கரி மருந்தாய்
கந்தகம் பூசியதாய்
தோற்றமே அறியாது
உன் துயர் தீர்க்க
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்..

இருந்து பார் இது நடக்கும்
மருந்துக்கு வழி இன்றி
மனை எங்கும் பகை கிடக்கும்
சிதறும் பகைக் கலங்கள்
சிதை வீழும் படைக் குகைகள்
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

துரோகம் புரிந்த வீரர்
தலைகள் நாய் நக்கும்
விரோத போக்கு எல்லாம்
விழிகள் பிதுங்கி நிற்கும்
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

திருந்து நீ திருந்தி விட்டால்
தினம் வெற்றி பெற்றிடலாம்
திசைகள் நான்கினிலும்
விசை விட்டு பறந்திடலாம்

..கவிப்புயல் சரண்..