அனுமதி பத்திரம் இல்லாமல் பயணிக்கலாம்!

76

பிரதமர் தகவல் இன்று சனிக்கிழமை காலை வெளியிடப்பட்ட பயண அனுமதி பத்திரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பிரதமர் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இன்று வெளியிடப்பட்ட புதிய அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது!

அதன்படி, காலை 6 மணியில் இருந்து மாலை 7 மணி வரையான பகல் பொழுதில் உங்கள் இருப்பிடத்தில் இருந்து வெளியே பயணிக்க அனுமதி பத்திரம் தேவையில்லை என பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் உங்களிடம் ‘வதிவிட முகவரி கொண்ட ஏதேனும் ஒரு சான்றிதழை கோருவார்கள்’ என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் 10 கிலோமீற்றருக்கு அதிகமான தூரம் பயணிக்கவேண்டுமென்றால் அனுமதி பத்திரம் கட்டாயம் தேவை எனவும், அதில் குறிப்பிடப்பட்ட ஏதேனும் ஒரு காரணத்திற்காக மாத்திரமே வெளியில் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இலகுபடுத்தப்பட்ட அனுமதிப்பத்திரம் இன்னும் சில மணிநேரங்களில் வெளியிடப்படும் எனவும் அறியமுடிகிறது.