அனுமதி பத்திரம் இல்லாத பலருக்கு தண்டப்பணம்

34

இல் து பிரான்சுக்குள் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை மாலை இல் து பிரான்சின் இடங்களில் சோதனைகளை மேற்கொண்ட காவல்துறையினர், முகக்கவசம் அணியாத 18 பேருக்கு தண்டப்பணம் அறவிட்டனர். மேலும் போதிய அனுமதி பத்திரம் இன்று வெளியே பயணித்த 63 பேருக்கு தண்டப்பணம் அறவிட்டனர்.

உள்துறை அமைச்சர் , Gérald Darmanin தெரிவித்ததன் படி, அடுத்துவரும் நாட்களில் சோதனை நடவடிக்கைகள் மிக தீவிரமாக இடம்பெறும் எனவும், இல் து பிரான்சுக்குள் 4.500 காவல்துறையினர் இதற்காக குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

நேற்று மாலை இல் து பிரான்சுக்குள் மாத்திரம் 1,369 பேர் சோதனையிடப்பட்டிருந்தனர்.