இந்து சனாதர்மத்தை தோலுரித்து காட்டிய web series ,அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய விராட் கோலிக்கு பிஜேபி எம்பி வேண்டுகோள்
அண்மையில் வெளியான webseries ஒன்றை இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தயாரித்து வெளியிட்டிருந்தார்.இதில் இந்து சனாதர்மத்தை அவமதிக்கும் பல காட்சிகள் காட்டப்பட்டிருப்பதாக வட இந்தியர்கள் கொந்தளித்து வருகின்றனர்.இந்து பெண் கடவுள்கள் பெயர்கள்,படங்கள் தகாத இடங்களில் காட்டப்பட்டிருப்பதாகவும்,புனித இந்து பிரதேசங்கள்,வன்முறை மிக்க இடங்களாக காட்டப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.இதனையடுத்து மிகபெரிய எதிர்ப்பு அலை ஒன்றை வட இந்திய மக்கள் மத்தியில் பரப்பட்டு வருகின்றது.இவற்றுக்கு பதிலளித்த அனுஷ்கா சர்மா,சமூகத்தில் காணப்படும் உண்மை நிலைகளையே தாம் படத்தில் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் அனுஷ்கா சர்மாவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த பாஜக உறுப்பினர் ஒருவர்,அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்துவிடும்படி விராட் கோலிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
– அனுஷ்கா சர்மா உருவ பொம்மை எரிப்பு
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் போய் கொண்டிருந்தாலும்,ஒரு திரைப்பட காட்சி தொடர்பாக பெரும்பாலான மக்களை திசை திருப்பி ட்ரென்ட் பண்ண சில ரூபா மதிப்புள்ள இன்டர்நெட் இருந்தால் போது என்ற நிலைக்கு இந்தியா முன்னேறியிருப்பது வருத்தமளிக்கின்றது.இவர்கள்தான் ஊழலும் கவனகுறைவும் மிக்க இந்திய அரசை தேர்ந்தெடுக்கும் அதன் பங்காளர்கள்.