Apple நிறுவனத்தின் நிறுவனர் புற்று நோயுடனான தனது நீண்ட கால போராட்டத்தின் பின்னர் உலக வரலாற்றில் அமெரிக்க டொலர் 700 பில்லியன் பெறுமதியான தனது நிறுவனத்தின் சொத்துக்களை விட்டு சென்றுள்ளார்.
மரண தறுவாயில் அவர் கூறிய வார்த்தைகள் இவை.
எனது தொழில் வாழ்க்கையில் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத சிகரங்களை நான் தொட்டது உண்மையென்றால், அதே போல் நான் பட்ட சிரமங்களும் உண்மைதான். நான் அடைந்த இமாலய வெற்றி உண்மையில்லை என்பதை உணர்ந்து கொள்ள இறுதி நேரத்திலாவது எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதுதான் உண்மை.
இதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது எனது மரணப்படுக்கையில் இருந்து கொண்டு எனது கடந்த காலத்தை மீட்டிப்பார்க்கின்றேன் நான் தேடிய புகழ் செல்வம் அனைத்தும் மரணத்தின் பிடியில் அர்த்தமற்றதாகி விட்டது.
இத்தருணத்தில் நான் உணர்வது மரணம் என்னை அணைத்துக்கொள்ள என்னருகில் அமர்ந்திருப்பதை. எனது வாழ்க்கைக்கு தேவையான செல்வங்களை தேடிக்கொண்டு உறவுகள், கலைகள், எனது சிறுபராய கனவுகளை அடைய முயற்சி செய்திருக்க வேண்டும். அதீதமான எனது பொருளீட்டல் எதனையும் அனுபவிக்க முடியாத திருப்புமுனையில் என்னை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
இறைவன் அன்பு எனும் உணர்வை எம் எல்லோருக்கும் அருட்கொடையாக வழங்கியுள்ளான். நாம் வாழும் காலத்தில் அதனை அதிகமாக தேடி அதிகமாக பகிர்ந்துகொள்ள வேண்டும். செல்வங்களை அல்ல.
நாம் தேடிய செல்வங்களை எம்மால் கொண்டு செல்ல முடியாது. நாம் பகிர்ந்து கொண்ட அன்பின் நினைவுகளை மாத்திரமே கொண்டு செல்லமுடியும். அதுதான் எம்மை தொடரும். எனது இறுதி தருணத்தில் அவைதான் இந்த இருட்டறையிலும் எனக்கு வெளிச்சத்தையும் நம்பிக்கையையும் தருகின்றது.
இவ்வுலக சிறிது கால வாழ்க்கை எல்லையற்றது. எங்கே வேண்டுமானாலும் போகலாம், முயற்சி இருந்தால் எந்த சிகரத்தையும் தொடலாம். அன்பு என்பது பல்லாயிரம் மைல்கள் எம்முடன் பயணிக்கக்கூடிய உணர்வு. அது எமது இதயத்திலும் கைகளிலும் உள்ளது. உலகின் அதி கூடிய பெறுமதியான படுக்கை நான் இப்போது படுத்திருக்கும் படுக்கை. என்னால் எல்லாவற்றுக்கும் பணத்தை கொண்டு ஆட்களை அமர்த்த முடிந்தது. ஆனால் எனது நோயை சுமக்க எனது பணத்தை கொண்டு என்னால் யாரையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. எந்த ஒரு பொருளையும் நாம் இழந்தால் மீண்டும் பெறுக்கொள்ளவோ தயாரித்து கொள்ளவோ முடியும் ஆனால், எம்மால் இழந்தால் பெற்றுக்கொள்ள முடியாத ஒன்று எமது வாழ்வு. வாழ்வில் எந்த ஒரு காலகட்டத்தில் நாம் இருந்தாலும், மரணத்திரை எப்போது விழும் என்று எமக்கு தெரியாது. தெரிந்தாலும் எம்மால் தடுக்க முடியாது.
குடும்பத்தினர் மீதும், குழந்தைகள் மீதும், உறவினர்கள் மீதும் அன்பு காட்டுவதுடன் உங்கள் ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்துங்கள் !
– சர்வானந்தன்