சிங்கள தேசத்தின் அரசியல் அரங்கை, கடந்த 69 ஆண்டுகளாக அலங்கரித்த, ஜக்கிய தேசியக்கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரு கட்சிகளும், முதற்தடவையாக அட்சிக்கட்டிலோ அல்லது எதிர்க்கட்சியாகவோ அமையாத பாராளுமன்றம், இம்முறை தேர்தலின் பின் சிங்கள தேசத்தில் அமையவுள்ளது. இரண்டு புதிய கட்சிகளின் பிரதான பிரசன்னம், ஒரே காலப்பகுதியில் அமைவது மட்டுமன்றி, இரண்டு பிரதான கட்சிகளின் மறைவிற்குக் காரணமாகவும் அமையலாம். இருந்தும் இது சிங்கள மனவோட்டத்திலோ அல்லது சிந்தனை விருத்தியிலோ, எவ்வித மாறுதலையும் வெளிப்படுத்தத் தவறுவது மட்டுமன்றி, பழைய கள்ளு புதிய புட்டிகளிலானாலும், கடந்த காலத்தை விட மிகவும் புளித்ததாகவே வெளிப்படுவது, மேலும் அதீத கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆனால் தறிகெட்டு நிற்கும் ஈழத்தமிழ் அரசியல், என்ன வேசம் எடுத்தாலும், மாற்றத்தின் வெளிப்பாடாக, உண்மையின் தரிசனமாக, யதார்த்த புறநிலையின் தொழிற்பாடாக அமையுமா? என்றால், அது பில்லியன் டொலர் கேள்வி தான் போங்கள்!!
– நன்றி நேரு குணரட்ணம்