கைதடியில் அத்துமீறிய இராணுவ சிப்பாய், காலை முறித்த இளைஞர்!

2406

கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ சிப்பாயின் கால் முறிவடைந்தது யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதடி பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் அதி வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது.அதனை கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் மறித்துள்ளார்.இதன்போது அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இராணுவச் சிப்பாய் மீது மோதியுள்ளது. இதனால் இராணுவச் சிப்பாயின் கால் முறிவடைந்துள்ளது. படுகாயம் அடைந்த இராணுவ சிப்பாய் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மோதி இளைஞன் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இப்பகுதியில் கொரானா காலத்தில் இருந்து ஶ்ரீலங்கா இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன்,வீதிகளில் வருபவர்களை இஷ்டத்துக்கு மறித்து விளையாடி கொண்டிருந்ததை குறிப்பிடதக்கது.