அதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன ?

59

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மூன்றாவது அலையினை பிரான்ஸ் எதிர்கொண்டுள்ள நிலையில், நாடளாவியரீதியிலான கட்டுப்பாடுகளை அதிபர் ஏமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

அறிவிப்புக்களின் முக்கியமான பகுதி

  • வரும் சனிக்கிழமை முதல் மூன்று வார காலத்துக்கு நாடளாவியரீதியில் பாடசாலைகள் மூடப்படுகின்றன.
  • இதுவரை அறிவிக்கப்பட்டிருந்த 19 பிராந்தியங்களையும் கடந்து நாடளாவியரீதியில் இரவு 7 மணியுடன் ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு வருகின்றது.
  • ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வர்த்தக அங்காடிகள் மூடப்படுகின்றது.
  • உரிய காரணங்கள் இன்றி மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஏப்ரல் 5 முதல் தடை செய்யப்படுகின்றது.
  • பகல் வேளைகளில் 10 கிலோ மீற்றருக்கு அப்பாலான போக்குவரத்து உரிய அத்தாட்சி பத்திரங்களுடனேயே அனுமதிக்கப்படும்.
  • வீடுகளில் இருந்து வேலை செய்யப்படுவதற்கு ஊக்குவிக்கப்படுவதோடு, அதனை முறைப்படுத்துவற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
  • முடங்கநிலையில் உள்ள வர்த்தகர்களுக்கான உதவிகள், கொடுப்பனவுகள் நீட்டிக்கப்படுகின்றது.
  • மே மாத நடுப்பகுதியில் நாடு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான படிமுறை படிமுறையிலான நிகழ்ச்சித்திட்டம் அறிவிக்கப்படும். உணவகங்கள், அருந்தகங்கள், சுற்றுலாதளங்கள், கலைக்கூடங்கள் போன்றன திறப்பதற்குரிய நிகழ்ச்சி திட்டமும் இவ்வேளையில் அறிவிக்கப்படும்.
  • கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் விரைவுபடுத்தப்படும்.

31 மார்ச்சில் இருந்து 70 வயதுக்கு மேலானவர்கள்
16 ஏப்ரலில் இருந்து 60 வயதுக்கு மேலானவர்கள்
15 மேயில் இருந்து 50 வயதுக்கு மேலானவர்கள்
யூன் நடுப்பகுதியில் இருந்து 50 வயதுக்கு கீழானவர்கள் என அனைவருக்கும்
தடுப்பூசி வழங்கும் திட்டம் நிரல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது 7000 அளவில் உள்ள தீவிரசிகிச்சைப் பிரிவு கட்டில்களின் போதாமையினை கருத்தில் கொண்டு, இதனை 10 ஆயிரமாக உயர்த்தப்படும்.