லண்டன் அதி உயர் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு வலையத்துக்குள் (“tier 3 “) எதிர்வரும் புதன்கிழமை முதல் நகருவதாக பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எசெக்ஸ் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் சில பகுதிகளும் மூன்றாம் அடுக்கில் நுழைவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இங்கிலாந்தின் மருத்துவமனைகள் யாவற்றிலும், கொரோனா வைரஸ் பாதிப்புடன் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், லண்டனில் பாதிப்பு அளவின் கடுமையை உணர்த்தும் ரியர் 3ஆம் கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்யும் தரவுகள் குறித்து பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அரசாங்கம் விளக்கியுள்ளது.
இதேவேளை லண்டனில் அபாயகர அளவில் உயர்ந்து கொண்டே போகும் பாதிப்பு அளவை ரியர் 3 என்றில்லாமல், டயர் 3 பிளஸ் என்ற அளவுக்கு மேலும் கடுமையாக்கலாம் என கவுன்சில் தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். லண்டனைத் தொடர்ந்து எஸ்ஸெக்ஸ் பகுதியும் ரியர் 2 என்ற நிலையில் இருந்து ரியர் 3 ஆக உயர்த்தப்படவுள்ளது.

இந்தப் பகுதிகளில் விடுதிகள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன. விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்வையிட ரசிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வசிப்பிடங்களை விட்டு வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று குடியிருப்புவாசிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் கென்ட், மெட்வே, ஸ்லொஃப் ஆகிய பகுதிகளும், தென்கிழக்கு இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளும் ஏற்கெனவே டயர் 3 என்ற நிலையில் உள்ளன.
உள்ளரங்க நிகழ்ச்சிகள், தனியார் தோட்டங்கள் (private gardens) அல்லது வெளிப்புற வளாகங்கள் ஆகியவற்றில் குடும்ப உறுப்பினர்கள் நீங்கலாக வேறு எவருடனும் சேர்ந்து செல்ல முடியாது.
வெளிப்புறங்களான பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற இடங்களில் 6 பேர் வரை குழுவாக இடைவெளி விட்டு சந்திக்கலாம்.
கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள் போன்ற, தனி பராமரிப்பகங்கள் திறக்கப்பட்டிருக்கலாம்.
மதுபான விடுதிகள், உணவகங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்க வேண்டும். அதே சமயம் அவற்றில் பார்சல் சேவை வழங்கப்படலாம். விளையாட்டரங்குகளில் ரசிகர்கள் பார்வையிட அனுமதியில்லை.
உள்ளரங்க பொழுபோக்கு பகுதிகளான திரையரங்குகள், ஸ்னோபோலிங் மையங்கள் போன்றவை மூடப்பட்டிருக்க வேண்டும்.
ரியர் 3 பகுதியில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்படுவர்.
-ஈழம் ரஞ்சன்-