கரும்புலிகள் நாள் நிகழ்வில் பங்கெடுத்த ஆஸ்திரேலிய அரசியல்வாதி

82

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல வழக்கறிஞரும் ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதியுமான ஹக் மெக்டெர்மொட் தொடர்ந்து தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் செயல்பட்டு வருபவர் மேலும் இவர் ஆஸ்திரேலிய சவுத் வேல்ஸ் தொகுதியின் பாராளுமன்ற தொகுயின் உறுப்பினருமாக உள்ளார்.

கடந்த மாதம் அனுசரிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில் இலங்கை அரசிற்கு எதிரான இனப்படுகொலை குற்றசாட்டுகளை முன்வைத்து சிங்களர்களால் பெரிய எதிர்ப்பை சம்பாதித்தார் இருப்பினும் தொடர்ந்து தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.இந்நிலையில் சிட்னி நகரில் தமிழர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற விடுதலை புலிகளின் ஒரு படைப்பிரிவான கரும்புலிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.மேலும் அந்நிகழ்வில் பேசுகையில் கரும்புலிகளின் தியாகத்தையும்,வீரத்தையும் மேற்கோள் காட்டி புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்ந்து தமிழர்களின் உணர்வில் பங்கெடுத்து வரும் அவர் ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

Karthik