15 வருடங்கள் முதலே ரணில்,சுமந்திரன் பேர்வழிகளின் முடிவை சரியாக கணித்த பாலா அண்ணா…

500

15 ஆண்டுகளுக்கு முன்னர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இலண்டனில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது,

ரணில் ஒரு வஞ்சகம், சூது செய்யும் நரியே தவிர, ஒரு ஆரோக்கியமான ராஜதந்திரியோ அல்லது மக்கள் நலன் நோக்கிய சிந்தனையாளனும் அல்ல என தெளிவாக சொல்லியிருந்தார்.

1977ம் ஆண்டில் இருந்து 1994 ஆண்டு சந்திரிக்கா வரும் வரைக்குமான 17 ஆண்டுகள் இலங்கையில் கோலோச்சிய மிகப்பெரும் கட்சியான ஜக்கிய தேசிய கட்சி தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட வெல்ல முடியாத அளவிற்கு அழிக்கப்பட்டிருக்கிறது.

விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி அழிப்பதற்கு முழு அளவிலான செயற்பாடுகளை மேற்கொண்ட ரணில் என்ற வஞ்சக நரி, இன்று வெறுங்கையுடன் வீடு செல்கிறது. இந்த விடயத்தை ஏற்கனவே அறிந்து கொண்ட வஞ்சக நரி ஒரே ஒரு மத்திய வங்கி ஊழலில் 12000 கோடியை சுருட்டி தனது பைக்குள் போட்டுக்கொண்டது.

இத்தகைய குரூர தன்மைகளையும், பண்புகளையும் கொண்ட ரணிலுக்கு சேவகம் செய்யும் ஊழியனாக இருந்த சுத்துமாத்து சுமந்தி எத்தகைய கேவலமானவனாக இருப்பான் என்று சாதாரண பாமர மகனாலேயோ அல்லது மகளாலேயோ புரிந்து கொள்ள முடியும்.

இந்த விடயங்களை படித்தவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்ளும் மூளையில் சிரங்குள்ள ஈனர் கூட்டம் விளங்காமல் தொடர்ந்தும் ஏன் சுமந்திரனுக்கு வெள்ளை அடித்து வருகின்றனர்!!!???

வினையின் அறுவடை என்பது ரணிலுக்கு மட்டுமல்ல, சுமந்திரன், மற்றும் அவருக்கு செம்பு தூக்கும் அனைவருக்கும் பொதுவானது.

“நீ எப்படிப்பட்டவன் என்பதை புரிய உன்னை சுற்றியுள்ள நண்பர்களை அறிந்தால் போதுமானது”

இது எமது பெரியோர்களின் கருத்தியல் மட்டுமல்ல, வரலாற்று உண்மையும் கூட…

மைக்கல் ப்ரான்சிஸ்