பின் தள நடவடிக்கைகளின் வரலாற்றுத் தடங்கள் – பிரிகேடியர் பால்ராஜ்

202

சமர்க்களநாயகனின் பின்தள நடவடிக்கைகள் நன்கு கட்டமைக்கப்பட்டவை.

ஒரு சமர்க்களத்தில் முன் தளத்தைப் போலவே பின் தளத்தையும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் ஆராய்ந்து ஒழுங்கமைப்பவர்.

பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் அடைந்த வெற்றிகள் அதற்கு என்றுமே கட்டியம் கூறி நிற்கும்.

எந்த இடத்தில் மருத்துவநிலைகள்,

களமருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும், எந்தப் பாதைகள் அல்லது வீதிகள் மூலம் விழுப்புண் அடைந்தவர்களையும் வீரச்சாவு அடைந்தவர்களையும் பின் நகர்த்த வேண்டும் என்பதை சமர்க்களநாயகனே தீர்மானிப்பார்.

இத்தாவில் பெட்டிச்சமரில் முழங்காலுக்கு மேல் பகுதியில் அதுவும் மேல் தொடையுடன்(Upper Thigh) தனது இரண்டு கால்களையும் இழந்தவர்தான் இந்த ஒளிப்படத்தில் நடுநாயகமாக இருப்பவர்.

இரு கால்களும் விழுப்புண் அடைந்த அந்த இடத்திலேயே(On the spot) துண்டிக்கப்பட்டு தொடைநாடிகள்(Femoral Arteries)மூலம் சீறிப்பாய்ந்த குருதியைக் கட்டுபடுத்தினர் முன் களத்தில் நின்ற களமருத்துவ போராளிகள்.

குருதிப் பெருக்கை கட்டுப்படுத்த முன்னரும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் சில நிமிட நேரங்களுக்கும் இடையிலும் அண்ணளவாக 1.5 லீற்றர்களுக்கு அதிகமான குருதி சிந்திவிட்டான் இந்த வீரன்.

ஒரு மனிதனின் நியம குருதி அமுக்கம் 120/80 mm Hg ஆகும். ஆனால் இவனின் குருதியமுக்கம் அளவிட முடியாத அளவு அந்த நேரத்தில் வீழ்ச்சி அடைந்திருந்தது.

இந்த அதிகரித்த குருதிப் பெருக்கால் ஏற்பட்ட Hypovolemic shock அல்லது Hemorrhagic shock இனால் இறந்து கொண்டிருந்தவனை விரைந்து மீட்டு கடவுளாகினர் களமருத்துவர்கள்.

இத்தாவிலுக்கும் செம்பியன்பற்றுக்கும் இடையேயான யாழ்நீரேரியில் கண்டல் தாவரங்களின் மிடுக்கான மிண்டிவேர்(Aerial roots) இடையே சாதுரியமாய் படகு மூலம் மீட்டனர் கடற்புலிகள்.

மணல் கொண்ட பாதையிலும் கிடங்கும் பள்ளமும் கொண்ட ஒழுங்கைகளிலும் பக்குவமாய் வாகனம் ஓட்டி கட்டைக்காட்டிலும் பின்னர் வன்னியின் தருமபுரம் இராணுவ வைத்தியசாலையில் சேர்த்தனர் வாகனப்பிரிவுப் போராளிகள்.

ஆம், களமுனைக்கும் வைத்தியசாலைக்கும் இடையே இவனுக்கு பாய்ச்சப்பட்ட குருதியின் எண்ணிக்கை 04 பைந்த்

(Pints) ஆகும்.

இவனுக்கு இத்தாவில் பிரதான மருத்துவநிலை தொடக்கம் கட்டைக்காட்டில் அன்று அமைந்திருந்த சிறு சத்திரசிகிச்சைக்கூடம் வரை அந்த வீரனும்கு சிகிச்சை அளித்த களமருத்துவர்களை ஒளிகொண்ட இவ் ஒளிப்படத்தில் நீங்கள் காணலாம்.

நன்றி கள மருத்துவர் தணிகை

Tharshan