தமிழ் தேசிய கூட்டமைப்பை தாண்டி எம்மால் தமிழர்களுக்கு தேவையானவற்றை வடகிழக்கில் செய்து கொள்ளமுடியும் என்றும் ஏற்கனவே ராஜபக்ச அரசு,தமிழர்களுக்கு நிறைய விடயங்களை செய்துள்ளது எனவும் இனியும் நாம் அவ்வாறே செய்து கொள்வோம் என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.வீதி அபிவிருத்தி,மின்சாரம் வழங்கல்,நீர் வழங்கல் என்று 30 வருட யுத்தத்தால் நலிவடைந்த வடக்கு கிழக்கை,நாம் ஓரளவு மீட்டு கொண்டுள்ளதாகவும்,இம்முறை தேர்தலில் கணிசமான தமிழர்கள் தமது பிரதிநிதிகளை நேரடியாக தெரிவுசெய்துள்ளதுடன்,கூட்டமைப்பு புறக்கணித்துள்ளதால்,நாமும் அவர்களின் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டிய எந்த தேவையும் அரசுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
போர் முடிந்ததும் தமிழர்கள் கூட்டமைப்பை அதிக ஆசனங்களை ஓடு பாராளுமன்றம் அனுப்பி,வடக்கு மாகாண சபையையும் நம்பி கொடுத்தனர்.ஆனால் எல்லாவற்றையும் வைத்து கொண்டு மேதாவிதனமாக கதைகள் மட்டும் பேசி திருந்ததுடன்,தீபாவளி தீர்வுகளை கூட பெற தவறியிருந்த நிலையில்,மக்கள் மாற்றத்துள்ளாகியுள்ளனர்.இன்று பெரும் பின்னடைவை கண்டு,தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற நிலையையும் இழந்துள்ளனர்.இவர்கள் எல்லாம் இருந்த போதே செய்யாதவர்கள்,இனி செய்வார்கள் என்று நம்புவது ஆபத்தானது.மாற்றங்களை நோக்கி தொடர்ந்து பயணித்து கொண்டே இருப்போம்