பிகார் தேர்தல்.
5 வருசம் ஆட்சில இருந்த பலத்தோட சேத்து இன்னும் மத்திய அரசு ராஜாங்கத்தோட சேந்து அசுர பலம் பொருந்திய ஒரு அணி.
தலைவர் ஜெயிலுக்கு போன பின்னாடி, தன்னோட பலமிழந்து, இப்போ இளம் படையோட ஆட்சிய பிடிக்க இறங்கிருக்க இன்னொரு அணி.
Simple ah ஒரு வார்த்தையில இந்த தேர்தல் பத்தி சொல்லனும்னா,
பழைய சாம்பியன் CsK vs இளைய பட்டாளம் DC
அனுபவம் வாய்ந்த நித்திஷ் குமார் vs அரசியல் கத்துக்கும் தேஜஸ்வி.
இன்னும் 2 நாள்ல 28ஆம் தேதி நடக்க போற மேட்ச்ல யார் ஜெயிப்பானு ஊரே ஒரு கருத்து சொல்லுது.
ஆனா யாருக்கு தெரியும், Cricket match உம் அரசியலும் ஒன்னு, பெரும்பாலும் நம்ம நினைச்சது தான் நடக்கும். ஆனா நினைச்சது நடக்காம போரதுக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கு.
அதே போல தான் நேத்து தொடர் வெற்றிய சந்திச்சிட்டு வந்த பெங்களூரு, தொடர் தோல்விய சந்திச்சிட்டு வந்திருந்த Csk கிட்ட off ஆயிடுச்சு.
நம்ம பிகார் election லயும் தேஜஸ்வி பக்கம் social mediaல அலை அடிக்க, ஆனா opinion polls ஓ நித்திஷ் குமார் பக்கம் புயலடிக்குது.
ஆனா நாம ஒன்னும் political analyst இல்ல. யாரு வருவானு சொல்ல. ஆனா ஒரு சக குடிமகனா கருத்து சொல்றேன்.
நம்ம நாட்ல most underdeveloped state னு ஒரு பட்டியல் எடுத்தோம்னா அதுல கண்டிப்பா பிகார் இருக்கும்.
Most crime records னு ஒரு list போட்டோம்னா கண்டிப்பா அதுல பிகார் இருக்கும்.
Most corrupted state ~ yes, it’s Bihar.
கல்வியறிவில பின் தங்கிய மாநிலம், Infrastructure ல பின் தங்கிய மாநிலம் னு இப்படி அடுக்கிட்டே போகலாம்.
நீங்க எதேர்ச்சியா சென்னை ல ஒரு கட்டிடம் காட்டுங்க. அதுல வேல பாக்குற பாதி வடக்கன் பிகார் காரானா தான் இருப்பான்.
எதேர்ச்சியா பத்து பானிபூரி கடைல விசாரிங்க, அதுல 6 பேரு பிகார்காரனா தான் இருப்பான்.
இது இவங்கள குறை சொல்வதற்காக சொல்லல. அரசு முறையா கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கொடுத்திருந்தா அவன் ஏன் கொத்தடிமையா தமிழ்நாட்டுக்கு சித்தாலு வேல பாக்க வரான்.
இப்போ இந்த Covid lockdown போட்டோனே நிறைய Migrant workers நடந்தே ஊருக்கு போனாங்க. அதுல பாதி பேரு பசியாலயும் வறுமையாலும் இறந்தாங்க. அதுல அதிகம் யாருனு ஒரு list போட்டோம்னா அதுக்கும் UP, பிகார் னு தான் வரும்.
கிட்டத்தட்ட 2014 ல இருந்து பிகார் அரசாங்கம் ஒரு மாநில அரசு பரீட்சைக்கும் recruitment நடத்தலனு Patna university students சொல்றாங்க.
அதனாலேயே குரூப் தேர்வுக்கு படிக்கிற மானவர்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கிறார்கள்.
நம்ம ஊர்ல ஏன் பிகார் காரங்கள வேலைக்கு வைக்கிறோம் னு அதுக்கு ஒரு காரணம் சொல்லுவாங்க. அவங்க தான் கம்மி கூலி கொடுத்தாலும் வாங்கிப்பாங்கனு. அப்போ இந்த இடத்தில அந்த மக்கள் நூறு ரூபா இருந்தா கூட பரவால்ல எங்க ஊருல அது கூட கிடைக்காது னு அத வாங்கிட்டு மாடு மாறி உழைக்கிறாங்க.
நம்ம Capital ல இரண்டு வகையா பிரிப்போம்.
1. Physical capital
2. Human capital
Physical capital னா அது ஒரு மூலப்பொருள் ( raw material), industry.. இது எல்லாமே அடங்கும்.
Human capital னா மனிதனால் ஒரு லாபமோ ஒரு பொருளோ உருவாக்கப்படுவது. அது அவனோட உழைப்பினால கூட இருக்கலாம், அறிவினால கூட இருக்கலாம்.
அந்த Human capital ல உருவாக்க கூடியது, Human Capital Resources.
அது தான் கல்வி. ஒருவனுக்கு போதுமான அளவு கல்வி கிடைச்சாலே போதும், அவன் சிந்திக்க தொடங்குவான், திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடுவான்.
அவனுக்கு வேலை கிடைக்கிலேனாலும், அவனால நாலு பேருக்கு வேலை கிடைக்க செய்வான்.
ஆனா அந்த Human capital resource ஆன கல்வி யும் சரிவர கொடுக்க தவறிவிட்டது பிகார் அரசு.
இப்போ மிச்சம் இருக்குறது இந்த தேர்தல். இதுல காலகாலமா பிகார் தேர்தல்ல இல்லாத வகையில ஒரு இளம் வேட்பாளர் முதல்வர் நாற்காலிக்கு போடுறாரு. என்னதான் அவரு நுனிநாக்குல இங்கிலிஷ் பேசினாலும், அவரு பின்னாடியும் ஒரு சாதிய கூட்டம் இருக்கமும், தன்னுடைய குடும்ப அரசியலும் தொற்றி கொண்டே தான் வருகிறது.
இந்த பக்கம் நித்திஷ் குமார எப்படியாச்சு பிகார் தேர்தல்ல மீண்டும் வெற்றியடைய செய்யனும் பலமா பாஜக காய் நகர்த்துது.
இவங்க ரெண்டு பேருக்கும் நடுல மாட்டிட்டு வோட்டு போடலாமா வேணாமா னு யோசிக்கிற நிலைமையில தான் மக்கள் இருக்காங்க.
எல்லாத்துக்கும் கோரானா தடுப்பூசி இலவசம் னு பாஜக சொல்ல..
1 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு னு தேஜஸ்வி சொல்ல…
நாங்க எந்த பக்கம் போகனு மக்கள் முழிக்க…
எந்த அறிவிப்புக்கும் roadmap இல்லாம வெத்து வாக்கா தான் இருக்கு னு டிவி சொல்ல…
Confusion க்கு மேல confusion ல ஓடிட்டு இருக்கு பிகார் மாநிலம்.
நன்றி🙏💕