புதிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் அதில் இனம் மற்றும் மதம் பற்றிய விவரம் வெளிப்படுத்தப்படாது என்று சிறிலங்கா பதிவாளர் நாயகம் அறிவித்துள்ளார்.இதுவரை காலமும் பிறப்புச் சான்றிதழில் இலங்கை தமிழர் என்றும் சிங்கள மக்கள் இலங்கை சிங்களவர் என்று குறிப்பிடப்பட்டனர்.
இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பிறப்புச் சான்றிதழில் “இலங்கையர்” என்று மட்டுமே இடம்பெறும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், டிஜிட்டல் முறைமையிலான புதிய பிறப்புச் சான்றிதழ்களை பொதுத் தேர்தலின் பின்னர் விநியோகிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு ஒரு தேசம் என்று இவ்வளவு காலமும் கிரிக்கெட்,தொலைபேசி டீவி விளம்பரங்கள் சேவைகள் வழியாக திணிக்கப்படு வந்தமை குறிப்பிடதக்கது.பெரும்பான்மை சிங்களவருக்கு சாதகமானவும் சிறுபான்மையினரின் தேசிய அடையாளங்களை ஒழிப்பதற்காகவும் திட்டமிட்டு அறிமுகப்படுத்தப்படுகின்றன.இதுவரை காலமும் எல்லோரும் இலங்கையர் என்று பெரும்பான்மை சிங்களவர்கள் கூறும் போது,நாம் பிறப்புசான்றிதழ்களில் இலங்கை தமிழர் என்றுதான் உள்ளது,இலங்கையர் இல்லை என்று வாதாடும் சந்தர்ப்பம் இருந்தது,பேரினவாதம் தனது காய் நகர்த்தல்களை சிறப்பாக செய்து வருகின்றது.ஆட்சி மாற்றங்களை நம்பி அரசியல் செய்யும் போக்கிலேயே தமிழர் தரப்பு இன்னும் இருக்க,ஆட்சிகள் மாறினாலும் மாறாத சிங்கள பேரினவாத கபட நோக்கங்கள் பற்றி விழிப்புணர்வு தமிழர்களுக்கு ஏற்படாதவரை,தமிழ் அரசியல்வாதிகள் குதிரை ஓட்டிகொண்டே இருப்பர்.