சிறிலங்கா மஸ்கெலிய, நல்லதண்ணி, வாழைமலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொறியில் அரிய வகை கருஞ்சிறுத்தையொன்று சிக்கியிருந்தது. பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் மயக்க மருந்து செலுத்தப்பட்டு, சிறுத்தை மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக உடவளவை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு விசேட கூண்டில் வைக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கருஞ்சிறுத்தை உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனைக்குட்படுத்த பேராதனை பல்கலைகழகத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.