இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னாரில் வைத்து இலஞ்சம் வாங்கிய நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாடு ஒன்றை சீர்செய்யும் வகையில் மன்னாரில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வட பிராந்திய முகாமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓசி வேலை என்ற போர்வையில் பெரும்பாலானா அரச ஊழியர்கள் தங்களுக்கான வேலைகளை சரிவர செய்வதில்லை,நேரத்தை வீணடித்து கொண்டு அரச சொத்துக்கள்,மக்கள் வரிப்பணங்களை முறைகேடாக பயன்படுத்தி வருகிறார்கள்.போதாகுறைக்கு மேலதிகாரிகள் லச்சங்களில் ஊறியுள்ளதுடன்,தனக்கு கீழ் உள்ளவர்களுக்கும் இவற்றை பழக்கி மொத்த அமைப்பையும் லஞ்சத்தில் ஊற வைத்து விடுகிறார்கள்.இவர்களை மொத்தமாக களையெடுத்து கடூழிய சிறை தண்டனைகள் கொடுக்குமிடத்தே,இவற்றை கட்டுக்குள் கொண்டு வரலாம்.