மஹிந்த குடும்பத்துக்கு எதிராக தமிழர்களை ஒன்றிணைக்கும் பிரித்தானியா..!

241

மகிந்த தரப்பின் வெற்றி தனித் தமிழீழ சிந்னையை முற்றாக ஒழிக்கும்! பிரித்தானியாவின் கொன்சவேட்டிவ் கட்சிப் பிரபு நெஸ்பி தெரிவிப்பு.

அதெப்படி முடியும்? தமிழரின் நியாயமான கோரிக்கைகள்,சுயநிர்ணய உரிமைகளை கேட்கும் போதே,விடுதலைபுலிகளை பற்றி பேசி சிங்கள இனவாத தரப்பு ஆட்சியை பிடிக்கின்ற போது,மறுபக்கமாக அதே சிங்கள இனவாத அரசும் அதன் அடக்குமுறைகளும் தமிழர்கள் மத்தியில் தனி ஈழ சிந்தனைகளை தான் தோற்றுவிக்கும்,தமிழ் இனத்தின் உயர் பாதுகாப்பு அச்சமும் தனிநாடு ஒன்றை நோக்கிதான் மக்களை உந்தி தள்ளும்.இதற்கு முன்னரும் இதேதான் நடந்தது.வரலாறு நெடுகிலும் இதுதான் நடக்கின்றது.

பிரித்தானியா ஏகாதிபத்தியம் தமிழர்களை பகடை காய் ஆக்க முயல்கின்றதா? பிரித்தானியா அரசியலில் தமிழர்களின் பங்கு அதிகரிக்கும் நிலையில்,அதனை வைத்து தமது நலன்களை முன்னிறுத்த முயல்கின்றதா? அல்லது தமிழர்களை உசுப்பேத்த முயல்கின்றதா? இல்லை பின்னணியில் இருந்து அடுத்தகட்ட நகர்வுகளை மஹிந்தவுக்கு எதிராக தமிழர்களை கட்டமைத்து இயக்க போகின்றதா?