லண்டன் – கொரோனா வைரஸ் அவர்களின் மோசமான கணிப்புகளை விட வேகமாக பரவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறியதையடுத்து, அடுத்த வாரம் இங்கிலாந்தில் புது lockdown விதிக்க பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசித்து வருவதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தொற்றுநோய் பிரிட்டனின் பெரும்பாலான பகுதிகளில் பரவி வருகிறது, அங்கு உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 46,299 ஆகும், இது ஐரோப்பாவில் அதிகம்.புதிய நடவடிக்கைகள் இன்னும் விவாதத்தில் உள்ளன, இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார். ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் தங்கள் சொந்த கொள்கைகளைபடு நடத்துகின்றன என்பதும் குறிப்பிடதக்கது.
ஒரு தேசிய உள்ளிருப்புக்கான முடிவு, பிரதமரின் கொள்கையின் வியத்தகு மாற்றத்தை பிரதிபலிக்கும் என்றும், அத்தகைய நடவடிக்கை அவசியம் என்று பல மாதங்களாக அவர் நம்பவில்லை என்பதும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட ஜான்சன் “இன்னொரு தேசிய உள்ளிருப்பின் துயரத்தை” தவிர்க்க விரும்புவதாகக் கூறியுருந்தமை குறிப்பிடதக்கது.
- மதிப்பிற்குரிய ஜோன் பென்றோஸ் உடனான இராஜதந்திர சந்திப்பு
- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு நாளில் பிரித்தானியாவில் நடைபெற்ற கவனயீர்ப்பு
- பிரித்தானியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.
- கீதா மோகனின் கவிதை தொகுப்பு யுகபாரதி அவா்களின் அணிந்துரை
- செஸ் உலகக் கோப்பை தொடரில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா #Praggnanandhaa