பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட கடந்த அறுபத்தாறு ஆண்டுகளில் தமிழ் மக்களின் தாயக நிலப்பரப்பு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலமும், நீர்ப்பாசனஅபிவிருந்தித்திடடங்கள் என்ற போர்வையிலும் அபகரிக்கப்பட்டு வருகின்றது. போரின் முடிவிற்குப்பின்னர், இராணுவ முகாம்களின் விரிவாக்கம், இராணுவத்தினரின் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்களை அமைத்தல் எனமுன்னெப்பொழுதிலும் இல்லாதளவு நிலப்பறிப்பு நடாத்தப்பட்டு வருகிறது. உலகின் மற்றைய நாடுகளில் நடைபெறும் நிலப்பறிப்புடன் இணைத்து இவ்விடயங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்தில் கொண்டுவரும் முகமாக பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவினருடன் இணைந்து லண்டனில் மாநாடு ஒன்றைநடாத்தியிருந்தது. மாநாடும் மாநாட்டை ஒட்டியகூட்டங்கள் என மூன்று தினங்களாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த கல்வியாளர்கள், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் எனப்பலரும் பேரராளர்களாக கலந்து கொண்டார்கள்.
முதலாம் நாள் நிகழ்வு
முதலாம் நாள் நிகழ்ச்சி பிரித்தானியப் பாராளுமன்ற வளாகத்தில் ஜனவரி 31ம் திகதிவெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமானது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான சிவோன் மக்டொனா லீ ஸ்கொட் ஆகியோர் உரை நிகழ்த்தியதைத் தொர்ந்து இந்தியாவிலிருந்து வந்திருந்த சமுகப் போராளியான மேதா பட்கர் இலங்கையில் ஆரம்பம் முதல் தமிழர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் மற்றும் அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டு தொடர்ந்துமேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டி தமது உரையை நிகழ்த்தினார். மேதா தமது உரையில் புத்ததர்மத்தையும் தர்மத்தின் ஊடான சமாதானத்தின் பாதையையும் மேற்கோள் காட்டியிருந்ததுடன் எவ்வாறாயினும் புத்த தர்மத்தை பின்பற்றும் இலங்கை அரசும் பெரும்பான்மை சமுகத்தினரும் அதன்படி ஒழுக தவறி விட்டதாகவும் குற்றம் சுமத்தினர்.
அடுத்ததாக Oakland Institute நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுராதா மிட்டால், மலேசியா பீனங் மாநில துணைமுதல்வர் பேராசிரியர் ராமசாமி, இஸ்ரேலிய பேராசிரியர் Oren Yiftachel சிட்னி பல்கலைக்கழகத்தின் சமாதானக் கற்கை நெறிகளுக்கான இயக்குனர் பேராசிரியர் Jake Lynch, ஐ.நா. இன் துணைப் செயலாளராகக் பணியாற்றிய Denis Halliday, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன், அரிய நேந்திரன், நாகேஸ்வரன், நவசமசமாஜக் கட்சியின் உறுப்பினர் றனத் ஆகியோர் உரை நிகழ்த்தினர்
இரண்டாம் நாள் நிகழ்வு
மறுநாள் பெப்பரவரி முதலாம் திகதிய நிகழ்வுதுறைசார் வல்லுனர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வியாளர் மாநாடாக நடைபெற்றது. மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இவ்வுரைகளுக்கு முன்னதாக இளம் ஊடகவியலாளர் தமிழ் மகா பிரபாகரனால் தயாரிக்கப்பட்ட“This Land Belongs to Army” எனும் ஆவணப்படம் காண்பிக்க்பட்டது. யுத்தத்திற்கு பிந்திய இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் எவ்வாறு பேரினவாத அடக்கு முறைக்குட்படுத்தப்பட்டுள்ளன என்பதை காட்சிகள் சித்தரித்திருந்தன.
முதலமர்வினை பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்குழு உறுப்பினர் இராஜ்குமார்நெறிப்படுத்தினார். இஸ்ரேலியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் Oren Yiftachel அவர்களது முதன்மை உரையுடன் ஆரம்பமானது. நில உரிமைத்துவம் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினார் குறிப்பாக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் நில அபகரிப்பின் ஊடாக தமிழர்களது உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் அல்லது தடுக்கும்வகையில் சர்வதேச சமுகத்துடன் இணைந்து எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பது குறித்தும் தெளிவுபடுத்தினார்.
சர்வதேச தரத்திலான தரவுகள் சட்டம் மற்றும்கோட்பாடு ஆகியவற்றை ஒப்பிட்டு இலங்கை விடயத்தில் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் போன்றவற்றையும் அறிவுறுத்தினார். சேபியா, ஈரான், எஸ்தோனியா, சூடான்மலேசியா துருக்கி இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் மக்கள் எதிர் கொண்டிருந்த இவ்வாறான பிரச்சினைகளை உதாரணமாக எடுத்துரைத்து இதன் மூலம் பாதிக்கப்படும் தமிழ் தாயக மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் அல்லது நீதியை பெற்றுக் கொடுக்க முடியும் என்பது குறித்தும் அவர் பரிசீலித்தார். பேராசிரியர் Jochen Hippler சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் Shapan Adnan மற்றும் லண்டன் பொருண்மியக் கல்லூரி பேராசிரியர் David Rampton ஆகியோரும் உரைநிகழ்த்தினர்.
இரண்டாவது அமர்வினை செல்வி கிறிஸ்ரினாவில்லியம்ஸ் நெறிப்படுத்தினார். முதன்மை உரையினை பேராசிரியர் ஜேக் லிஞ்ச் தமிழர்உரிமைகளுக்கு ஆதரவான குரல் மற்றும் சுதந்திரம் என்ற தலைப்பில் நிகழ்த்தினார். 21 ஆம் நூற்றாண்டில் இலங்கை அதிபர்மகிந்த யுத்த குற்றவாளியாக இனங்காணப்படுவாரா? ஏன ஆரம்பித்தது. இறுதி யுத்தத்தின்போது யுத்தக் குற்ற செயல்களில் ஈடுபட்டமைக்கு சான்றான ஆதாரங்களாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக இரகசியதகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த ஆவணத்தின் மூலம் பெயர்த் தெடுக்கப்பட்டதுடன் 2011 இல் ஐநா அதிகாரிகளின் அறிக்கையில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்தமையையும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே பெருந்திரளாக மக்களை கொன்று குவிப்பதற்கு காரணம் என்ன என வினா தொடுத்த அவர். சர்வதேச ரீதியாக இடம்பெற்ற முந்தைய உதாரணங்களை ஒருங்கிணைத்து விளக்கமளித்தார். இந்த நிலையில்இலங்கைத் தமிழர் பிரச்சினை சர்வதேச ஆர்வலர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டு அவர்களது கவனத்தையும் ஈர்த்துள்ளது என குறிப்பிட்டார்.
இவரது உரையைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் நில ஆணையாளர் திரு குருநாதன், பேராசிரியர் ராமசாமி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் உரைநிகழ்த்தினர். திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தனதுரையில் நில உரிமைகளுக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை காலத்தை வீணடிக்கும்செயலாகவே உள்ளன என சுட்டிக்காடடினார்.
இறுதியமர்வினை ஊடகவியலாளர் நிர்மானுசன் பாலசுந்தரம் நெறிப்படுத்தினார்.
Oakland Instituteஐ சேர்ந்த அனுராதா மிற்றல்முதன்மைப் பேச்சாளராக உரை நிகழ்த்தினார்.யாழ்ப்பலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் குமாரவடிவேல் காணொளிமூலமாக உரையாற்றினார்.
ஜெர்மனியில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தின் தலைவராகக் கடைமையாற்றிய ஈக்ஙூகூசூ ஏஹஙீஙீகூக்ஷஹட் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
மூன்றாம் நாள் நிகழ்வு
மூன்றாம் நாள் நிகழ்ச்சி ஹரோவில் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.