கார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்

115

தனிமனிதன் தவறினால் விபத்துக்கு இலக்காகி அநியாயமாகப் பலியான மூன்று குழந்தைகளுக்கும் அன்னைக்கும் ஆழ்ந்த இரங்கல்களுடனான கண்ணீர் வணக்கம்!

Brampton பகுதியில் ஒரு இளைஞனின் பொறுப்பற்ற

கவலையீனத்தால் ஏற்பட்ட விபத்தில் இவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

காவல்த்துறையிடமிருந்து தப்ப வேகமாக வாகனத்தைச் செலுத்தி ஏற்பட்ட விபத்தில், ஒரு வாகனத்தில் பயணம் செய்த 1, 4, 6 வயதுகளையுடைய மூன்று பெண் பிள்ளைகள், அவர்களின் 37 வயதான தாய் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்!

விபத்தை ஏற்படுத்திய 20 வயதான ஆண் உயிருக்குப் போராடுகின்றார்.

வேறு சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. 4 வாகனங்கள் இந்த விபத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளனர்!

நேற்று மதியம் 12.15 அளவில் Torbram Road and Countryside Drive சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நமது சின்னச் சின்ன கவலையீனங்கள், தவறுகள் எம்மை மட்டும் தண்டித்தால் பரவாயில்லை!

தவறுக்குக் காரணமாகாத அப்பாவிகளான அடுத்தவர் உயிர்களையும் பலி எடுக்கும் கொடுமை கொடிதிலும் கொடிது!

ஒருவரின் தவறால் 3 பிள்ளைகள் உட்பட 4 பேரின் இறப்போடு 4 வாகனங்கள் சேதம் ஒருவர் உயிருக்குப் போராடுகிறார்!

அறியாது நடந்த விபத்து அல்ல இது! தன்னலத்தில் நடந்த கொலை!

நன்றி Sivavathani