ரொறொன்ரோ நகரத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான வார இறுதிகளில் ஒன்றிற்கு ஒரு தசாப்தத்திற்கும் பின்பாக, ரொறொன்ரோ பொலிஸ் சேவை 2010 ஜி 20 உச்சிமாநாட்டின் போது “தவறுகள் நடந்ததாக” ஒப்புக் கொண்டுள்ளது.இதில் நூற்றுக்கணக்கான கனேடியர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். “ஏற்றுக்கொள்ள முடியாத” நிலைமைகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
“தவறுகள் நடந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம்” என்று ரொறொன்ரோ பொலிஸ் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.திங்கள்கிழமை காலை 16.5 மில்லியன் டாலர் நட்ட ஈட்டு வழக்கு நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
தடுத்து வைக்கப்பட்ட கனேடியர்கள் கிட்டத்தட்ட 25,000 டாலர் வரை இழப்பீடு பெறுவார்கள்.கனேடிய வரலாற்றில் மிகப் பெரிய சிவில் சுதந்திரங்களின் சமரசம்” என இந்த நடவடிக்கை கூறப்பட்டுள்ளது.
- பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு நாள்
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள் பிரித்தானியா
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நிகழ்வுகள் பிரித்தானியா
- அன்றே கூறினாா் எம் ஈழத்தின் கவிஞா்
- லன்டனில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவு நிகழ்வு