“ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல, வெறும் ஆயுத மோதலே” என்ற தொனிப்பொருளில் Sri Lankan Canadian Action Coalitionஇனால் நேற்று (Jun 6) Zoom காணொளி மாநாடு நடத்தப்பட்டது. இதில் Dr. சரத் சந்திரசேகர உட்பட நால்வர் கலந்துகொண்டனர்.
இனப்படுகொலைக்கு ஆதரவாக தமிழ் கனடிய அரசியல் தலைவர்கள் உட்பட ஏனைய அரசியல் தலைவர்கள், பாடசாலை சபைகள் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள், Scarborough Rough Park தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.விஜய் தணிகாசலம் ‘ஈழத்தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம்’ (Tamil Genocide Education Week Act -Bill 104) தொடர்பாக ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தில் கொண்டுவந்த சட்டமூலம் அனைத்துக்கும் எதிராக மிக விரிவான ஒரு விளக்கத் தொகுப்பாக இது அமைந்தது.
இதில் கனடியத் தமிழர்களின் ஆதரவு, அளிக்கப்படும் நிதியுதவி, தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பில் விளக்கப்பட்டது.
இனப்படுகொலை ஈழத்தில் நடக்கவில்லை. இது வெறுமனே தமிழ் கனடிய அரசியல்வாதிகள் கனடிய தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் நடத்த முன்னெடுக்கப்படுவது. இதனை முறியடிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
சட்டரீதியாக இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியாது. நடந்தது இனப்படுகொலை அல்ல என்பதை நிரூபிக்க திரு. சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
பல இனங்களும் சேர்ந்து வாழும் நாட்டில் கனடிய அரசு இனங்களுக்கிடையில் பிரிவினையைத் தூண்டும் விதமாக நடக்க முடியாது. பாடசாலை சபைகள் நடக்காத இனப்படுகொலையைப் பற்றி பிள்ளைகளோடு ஆராய்ந்து வரலாற்றை மாற்றமுடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த காணொளி மாநாட்டின் தாற்பரியத்தை தமிழர் அமைப்புக்கள் புரிந்து கொண்டு இதனை எவ்வாறு கையாளப் போகின்றன?
நன்றி Tharshiny