அலசுவாரம்

எமக்கான இந்தியக் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு

   அலசுவாரம் - 96 முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பான சனல்-4 காணொளி உலகம் முழுவதும் காட்டப்பட்டுவிட்டது.  இந்தியாவிலும் அது காட்டப்பட்டுள்ளது. அது தொடர்பான விவாதமொன்றில் கலந்துகொண்ட இலங்கை யரசின் இராணுவப் பேச்சாளர், பங்குபற்றிய ஏனையோர் கேட்ட கேள்விகளுக்கு சொதப்பலான பதில்களைக் கூறிக் காரியத்தைக் கெடுத்துவிட்டதாக வேறு விமர்சிக்கப்படுகிறது.  ஆக மொத்தத்தில் இலங்கையரசு நடத்தி யிருக்கும் அராஜகங்களையிட்ட வாதங்களும் பிரதிவாதங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றதேயொழிய, அவ்வராஜகங்களை நடத்திய...

பொருளாதாரத் தடை

அலசுவாரம் - 95தமிழக சட்டசபையில் இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசைக் கோரும் தீர்மானமும், அதையடுத்து இந்திய அதிகாரிகளின் இலங்கைப் பயணமும், சனல்4 இல் வன்னிப் படுகொலைகள் பற்றிய காணொளியும் சமீப காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு சற்று ஆறுதலூட்டும் முக்கிய நிகழ்வுகளாகக் காணப்படுகின்றன.  ஏதோ எங்களையும் உலகம் கவனிக்கிறது அனுதாபத்தோடும் ஆதரவோடும் பார்க்கிறது என்று சற்று மனமாறக்கூடியதாக எம்மைச் சார்ந்த நிகழ்வுகள்...

வளரவேண்டிய தமிழர் தேசியம்

அலசுவாரம் - 94“வரை சுமந்த திண்தோளன் மாருதி தன் உடலிணைந்த விரை சுமக்க வொட்டாது வீழ்வானோ தடுமாறி;”என்று கவிதை பிறக்கிறது, நடப்பு நிகழ்வுகளை நோக்கும்போது. கம்பராமாயணத்தில் இலக்குவனுட்பட வானரசேனை களத்தில் வீழ்ந்துவிட்டபோது சாம்பவானின் ஆலோசனைப்படி இறந்தவர்களை உயிர்ப்பிக்க அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வருகிறான்.  வானரசேனை உயிபெற்று எழுகிறது. அப்படி மலையையே தூக்கிய அனுமாருக்குத் தன் விதை பெரிய பாரமா? என்பதுதான் அதன் கருத்து.இலங்கையரசுக்கும்...

தமிழர் தேச வரைபடம்

அலசுவாரம் - 93கடந்த சில வாரங்களில் மிக முக்கிய நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன: பலராலும் கடவுளாகக் கருதப்பட்ட சிறீ சத்தியசாயி பாபா காலமானார் இளவரசர் வில்லியம், கேட் திருமண வைபவம் மகிழ்வுடன் நடந்தேறியது ஒசாமா பின்லாடன் வேட்டையாடப்பட்டார் முள்ளி வாய்க்காலில் நடந்த தமிழினப் படுகொலை எம்மவரால் நினைவு கூரப்பட்டது எல்லாவற்றுக்கும் மேலாய் ஐயா கருணாநிதிக்கும் அவரது குடும்ப வாரிசுகளுக்கும் ஏகபோக உரிமையாய் எழுதிவைக்கப்பட்டிருந்த, தமிழக அரசை ஆள்வதற்கான உரிமைச்...

ஐநா அறிக்கை ஏட்டுச் சுரைக்காய்

அலசுவாரம் - 92 ஐ நா நிபுணர்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.  அந்த அறிக்கையின் நிறைவேற்றுச் சாராம்சம் என்னுமொன்றை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளதாகக்கூறி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஒரு அறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளார்.  அந்த அறிக்கையில் காணப்படும் சில தமிழ்ச் சொற்கள் இதுவரை அறிந்திராதவையாகவுள்ளன.  இது எனக்கு மட்டும்தானா பலருக்குமா என்று தெரியாது. எங்களைப் போன்ற சாமானியர்களுக்கும் சற்று விளங்கும்படியாக, கடினமான சில சொற்களை நீக்கிவிட்டு அவ்வறிக்கையைப்...

சமயம் கெடுத்த தமிழ்

அலசுவாரம் - 91அனைவருக்கும் சித்திரைப் புதுவருட வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவிக்கிறேன்.   சித்திரைப்  புத்தாண்டு வருகிறது.  தமிழ் சிங்கள வருடப்பிறப்பு என்று இதை நாம் காலங்காலமாகக் கொண்டாடி வருகிறோம். ஈழத்தமிழர்கள் தைப்பொங்கலையும் புதுவருடத்தையும் சமமாகக் கொண்டாடும் வழக்கமுடையவர்கள். சாத்திரம் சொல்பவர்கள் இந்தப் புதுவருடம் உங்களுக்கு எப்படி அமையப் போகிறதென்பதைக் கணித்து எல்லா ராசிக்காரர்களுக்கும் புத்தகம் அடித்து வெளிவிடுவது தொடங்கி வாக்கிய கணித பஞ்சாங்கங்களை...

மீண்டும் போர்

அலசுவாரம் - 90 முப்பது வருடங்களுக்கு மேலாகப் போர் முனைப்போடு வாழ்ந்து, நாளும் பொழுதும் நமக்குக் கிடைத்த களவெற்றிகளைப் பற்றியே சிந்தித்து, தாயக விடுதலைக்காகப் பிரமிக்கத்தக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தி இறுதியில் சறுக்கலடைந்து, பழையபடி ஆனாவிலிருந்து தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நாம் மீண்டும் கனரக ஆயுதங்களைப் பாவிக்கும் போரொன்றைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.  ஆனால் இம்முறை நாம் போதிய பலத்தோடும், எம்மை...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்