Home ஊரின் வாசம்

ஊரின் வாசம்

நெல் அறுவடை நேரம்

அறுவடைக்காலம், வயல் புறங்கள் எங்கும், கலகலப்பும், களிப்பும் மிகுந்து காணப்படும். ஐந்து மாதத்திற்கு பின் கடும் உழைப்புக்கு பயன்கிடைக்கும் காலம் இது. மழை வெய்யில், பனி என்று காலநிலையின் தாக்கத்திற்கு இடையும் பயிரை பருவத்திற்கு பருவம் நாசமாக்கும் பூச்சிகள், பங்கசுகள் ஊடறுத்து முளைக்கும் புல் இனங்கள் என்பனவற்றை எல்லாம் அகற்றி பயிரை வீறாக்குகின்ற கடும்உழைப்பில் இருக்கின்ற விவசாயி உற்பத்தியை பயனாகும் காலம்...

தை முதலாம் திகதி தைப்பொங்கல்

உழவர் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்கலாம் இது தமிழில் உள்ள ஒரு கூற்று. அறுவடைச் செல்வம் வீட்டுக்கு வந்ததும் நிலம், நீர், கதிரவன், உழவு சாதனங்கள் ஆகியவற்றிற்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாவே பொங்கற் பெருவிழா. திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பாகவும் தை முதலாம் திகதி அறிவிக்கப் பட்டுள்ளதால் இப் பெருநாளின் பெருமை மேலும் உயர்ந்துள்ளது.பொங்கல் பற்றி விபரமாக...

தை பிறந்தது

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது வழக்கில் உள்ள முதுமொழி. எதிர்கால நம்பிக்கையை ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஊக்குவிக்கும் வாசகம் இது. புதிய வருடம் புதிய உற்சாகம், மாணவர்களுக்கு புதிய வகுப்பு. சாதித்து முடிக்க, கடந்த காலத்தை எடை போட துÖண்டலுக்குரியதாக எண்ணத்தை மனத்துக்குள் ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் ஏற்படுத்துகின்ற ஒரு புது ஆண்டு. உத்தியோக உயர்வு, இடமாற்றம், உத்தியோக ஓய்வு போன்ற மாற்றங்களையும்...

முற்றத்து தைப்பொங்கல்

தைப்பொங்கல் என்றால் சிறுபராயத்தில் ஊரில் எங்கள் வீட்டு முற்றத்தில் பொங்கி மகிழ்ந்த நினைவு தான் எழுகின்றது. பொங்கலைப் போலவே அந்த இனிக்கும் நினைவுகள்சுவையானவை. போர்ச்சூழல் வாழ்விலும், புலம்பெயர்ந்த பின்னைய வாழ்விலும் அதனைப் போல ஊரே மகிழ்ந்து கொண்டாடிய தைப் பொங்கலை மீளக் காண முடியவில்லை. அம்மா, அண்ணைமார், சித்தி என்று ஒரே கூட்டுக்குடும்பமாக ஒரே உலைச் சோறு உண்ட காலம்.மாமி வீடு,...

அம்மி – திருகை – ஆட்டுக்கல்

அண்மையில் சட்டன் மூத்தோர் வட்ட வழமை நிகழ்வில் ஒரு கண்காட்சி இடம்பெற்றது. போரில் முன்பு உபயோகத்திலிருந்த உபகரணங்களை நாங்கள் சேகரித்து காட்சிப்படுத்துவதாக ஒரு நிறுவனத்தின் இரு இஸ்லாமிய பெண்கள் வந்து சில பொருட்களைக் காட்சிப்படுத்தினார்கள். குழல் புட்டு அவிக்கப் பயன்படுத்தப்படும் புட்டுக்குழல், இடியப்பத்தட்டு, நீத்துப்பெட்டி என்பன போன்ற சிலதே அவை. ஊரில் அன்று முதல் பேராசிரியர் ராகுபதிபோன்றவர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடுவது...

காந்தீயம் டேவிட் ஐயா

அண்மையில் காலமானவர் காந்தீயம் டேவிட் ஐயா. ஊர்காவற்துறை ஊர்களில் ஒன்றான கரம்பனில் பிறந்தவர், கல்வியில் சிறந்தவர், மிகச்சிறந்த சமூக பட வரைகலைஞராக உயர்ந்தவர்.தமிழீழ உணர்வு, சமூக நல பரிவு, தீர்க்கதரிசனஅறிவு என்பனவற்றை செறிவாகக் கொண்டமைஅவரின் ஒளிர்வு. நாலு முழ வேட்டி, அரைக்கைமேல் சட்டை, காலில் ஒரு செருப்பு, குள்ளமான உருவம், வெள்ளை உள்ளம். இறுதி வரை திருமணம் புரியாத உறுதியான பிரம்மசாரியம்....

ஊரில் வளர்ந்த சமய உணர்வு

தாயகத்தைப் போல புலம்பெயர் நாடுகளில் சமய பாடம் பள்ளிக்கூடங்களில் கட்டாய பாடம் இல்லை. எங்கள் பிள்ளைகளை ஆலயங்களுக்கு நாங்கள் அழைத்துச் செல்லும்போது அவர்கள் இந்து சமயம் பற்றி கேட்கும் கேள்விகள் சிலவற்றுக்கு எமக்கே பதில் தெரியாது. ஆனால், எங்களிடம் இறை நம்பிக்கை ஊறி வளர்ந்திருக்கிறது. இன்றும் இங்கும் இறை நம்பிக்கையோடே வாழ்கின்றோம். தைப்பொங்கல் முதலாக தமிழ்ப் பள்ளிகளில் நடக்கும் ஆண்டு விழாக்கள்...

அந்த உரல் – அம்மிக்கல் உறவு

அண்மையில் இங்கே வாழும் ஒரு பெரியவர் பழம் சோற்றை இங்கு மகளிடம் கேட்டு தயார் செய்து உண்டு பார்த்ததாக சொன்னார். ஆனால் ஊரில் வாழும் தன் பேரன் பழம் சோறு என்றால், என்னவென்று தெரியாது என்கிறான் என்று சொல்லி அங்கலாய்த்தார். அந்த நாள் பழம் சோற்று நிகழ்வுகளை நினைவிற்கு கொண்டு வந்தார். உரையாடல் பழைய ஞாபகங்களை நோக்கி நகர்ந்தது. எண்ணிப் பார்க்கின்றபோது...

சின்ன வயது சினிமாப்படங்கள்

சினிமாப் படங்களைப் பார்ப்பதில் ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. இன்று வீட்டில் இருந்தபடியே விரும்பிய படத்தை விரும்பிய நேரத்தில் தொலைக்காட்சியை இயக்கிப் பார்க்கின்றோம்.தொலைக்காட்சிப் பெட்டிகளே இல்லாத அந்த நாட்களில் எங்கள் பள்ளிக் காலத்தில் தியேட்டர்களில் சென்று தான் படம் பார்க்க முடியும். தியேட்டர்கள் என்றால் அது நகரப் புறத்தில் தான் இருக்கும். 1960களை ஒட்டிய பின்னைய காலங்களில் யாழ்ப்பாணத்தில் பஸ் நிலையத்தையொட்டி ராணி...

இது விதைப்புக் காலம்

புரட்டாதி பிறந்தாலே உடன் நினைவுக்கு வருவது வன்னி வயல் விதைப்புத்தான். இதுதான் விதைப்புக்குரிய காலம். பருவத்தே பயிர் செய் என்பதற்கமைய கமக்காரர்கள் நெல்லை மொழியாக்கி பயிராக பச்சயம் தெரிய வைக்க கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்ற காலம் இது.சோற்றுக்குள் கையை வைத்து சுவைத்து உண்ணுகின்றோம். அந்த சோற்றுக்குக் காரணமான நெல்லை விளைவிக்க சேற்றுக்குள் கமக்காரர்கள் படும்பாட்டை அனுபவித்துப் பார்ப்போருக்குத்தான் தெரியும். 17 ஆண்டுகளுக்கு...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்