எழுதுவது என்னவெனில் ..

முள்ளிவாய்க்கால் முடிவின் பிறகு….

நண்பர் கோபி (ஒரு பேப்பர் ஆசிரியர்) ஒரு கருத்து கூறியிருந்தார். "முன்னாள் போராளி என்று எவரையும் குறிப்பிட முடியாது, போராளியானவர் எப்பொழுதும் போராளி, முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் இப்பொழுது போராட்டத்தை விட்டுக் கொடுத்தோ, காட்டிக் கொடுத்தோ செல்பவராக இருந்தால், அவரை முன்னாள்போராளி என்று எப்படி அழைக்க முடியும். போராளி என்ற சொல்லின் அர்த்தம் அதில் இழக்கப்படுகிறதல்லவா, எனவே போராளி என்பவர்...

நாளை மற்றும் ஒரு நாள்

கண்ணதாசன் ஒரு பாடலில் இவ்வாறு சில வரிகளை வைத்தான். ‘எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் எனக்காக உணவும் உண்ண எப்படி முடியும்? நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு. அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று’ இவ்வரிகளிலுள்ளே மிகமிக எளிய உண்மைகள் தான் அமைகின்றன.எனினும் அவை பேருண்மைகள். நம் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய மகா உண்மைகள். இவ்வரிகளை ஈழத்தமிழர் வாழ்வினுடனும்...

‘அ’ எழுதுதல்

தமிழ்த் தேசியம் என்பதை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்கிறோம் என்பதே இம்மாவீரர் மாதத்தில் மாவீரர்களுக்கு நாம் வழங்கும் முதலாவது வணக்கம் என நம்புகின்றேன். மாவீரர்கள் யாபேரும் தமிழ்த்தேசியத்தை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் போராளிகளாகி தம்மை ஆகுதியாக வழங்கி மாவீரர்கள் ஆனார்கள் என் பது எனது கருத்து அல்ல. தமிழ்த் தேசியத்தின் புரிதலுடன் போர்க்களத்தில் அவர்கள் புகுந்திருப்பார் எனில் அதன் பரிநாணம் வேறு. ஏனென்றால் தமிழ்...

அனேக கவிஞர்கள் அடிமை வியாபாரிகளாக மாறினர்

மிக மிக சமீபத்தில் ஓர் எதிர்வினை ஆற்றும் நோக்கம் கருதி, 'பாலஸ்தீன கவிதைகள்' என்ற மொழி பெயர்ப்பு கவிதை நுாலை வாசித்தேன். கவிஞரும் தமிழ்ப் பேராசிரியருமான எம்.ஏ.நுஃமான் அவர்கள் அதனை மொழிபெயர்த்திருந்தார். பலஸ்தீன இஸ்லாமிய மக்கள் படும் துன்ப துயரங்களையும் அவர்களது நாடு காண் விருப்பையும்,  அவர்களது எதிரி மீதான போர் பிரகடனங்களையும் அக்கவிதை கொண்டு இலங்குவதால் அக்கவிதைகள் நுஃமானால்  மொழி...

செத்தும் கொடுத்தான் சீதக்காதி

அண்மையில் நடந்த இரு சம்பவங்கள் பிரபாகரனை நான் எவ்வாறு விளங்கிக் கொண்டேன் என்பதனைக்கூறுமாறு என்னை நிர்ப்பந்தித்தன. பிரபாகரன் என்று சொல்லாமல் தேசியத் தலைவர் என்று அவரை அழைக்கவே விரும்புகிறேன். என் புரிதலில் பிரபாகரன் அவ்வாறானவர் தான். மேலும், தேசியத்தலைவரை மெச்சுவதனாலும்இ தேசிய விடுதலைப் போராட்டம் மீதான ஆர்வத்தினாலும் என் வாழ் நாளை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த முடியாது இடர்ப் படுகின்றேன். அது வெறும்...

அழிக்கப்பட்ட தமிழர்களுக்கும் அழிக்கப்பட முடியாத தமிழுக்கும்

ஏ.ஆர் முருகதாசின் `ஏழாம் அறிவு' திரைப்படம் பார்த்துவிட்டு வந்த அன்று 25-10-11 சாமம் ஒரு மணிபோல மேற்படி தலைப்பை இட்டு வைத்திருந்தேன். இத் திரைப்படம் குறித்துத் தான் இப்பத்தி எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன் `அழிபட்ட தமிழர்களுக்கும் அழிக்கப்பட முடியாத தமிழுக்கும் இது சமர்ப்பணம்' என்று ஏழாம்அறிவு திரைப்படத்தை முடித்திருந்தார் ஏ.ஆர் முருகதாஸ். இது ஒரு வியாபாரத் தந்திரம் என்று சிலர்...

மண் சுமந்த மேனியர்

ஓர் இரண்டு மாதம் முடிந்து விட்டிருந்தது-நான் கனடா போய் வந்து. ஈழத்தமிழ் மக்கள் உயிர்ப்புடன் வாழ்கிறார்கள் என்பதற்கான மூச்சுக் காற்று கனடாவின் டொரன்ரோ நகரில் பறந்தபடி இருந்தது. இப்படி ஓர் ஈழத்தமிழ் அடையாளத்துடன் இயங்குவதை நான் வேறெங்கும் கண்டிலேன். ஆனால் இவை பற்றியெழுவது எதுவும் இப்பத்தியின் நோக்கம் அல்ல. நோக்கம் யாதெனில் இங்கும் அரசியல் பேசுவதே.போரின் உக்கிரம் தாங்க முடியாததால்த் தான்...

கடவுளே என்று கதறவா? ஆண்டவனே என்று அலறவா?

எது செய்தால் தகும். இதை எழுத முனைகையில் என் கை பதறுகிறது. மனம் விம்மி வெடிக்கிறது? நீதி இன் னொரு முறை தூக்கிலிடப்படப் போகிறது. நியாயம் இன்னொரு முறை சுவரில் அறைபட்டு கொல்லப்படப் போகிறது. அறம் வெல்லும் என்பதெல்லாம் பொய் என்று அறைகூவப்படப்போகிறது.யாரை இறைஞ்சுவோம்? யாரைக் கெஞ்சிக் கேட்போம்? கடவுளேயென்று கதறினால் ஏதுமாகுமா? ஆண்டவனேயென்று அலறினால் அது நிகழாமல் போகுமா?  இம்...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்