Home கவிதைகள்

கவிதைகள்

நான் ஸ்ரீலங்கன் இல்லை..நீங்கள்??

ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள்எமை பயங்கரவாதிகளென அழைக்கின்றனர்ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களைபயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா?வேற்றினம் என்பதனால்தானேநமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர்ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள்எமை பிரிவினைவாதிகளென அழைக்கின்றனர்ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களைபிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா?வேற்று நாட்டவர்கள் என்பதினால்தானேநமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறதுநாமொரு இனம்எமக்கொரு மொழிஎமக்கென நிலம்அதிலொரு வாழ்வுவீர நிலத்தில் புதையுண்டிருக்கும் என் தோழியே!உறிஞ்சப்பட்ட குருதியும்மனிதப்படுகொலைகளும்அழித்துவிடுமா ஓரினத்தின் சரித்திரத்தை?சுதந்திரம் எவ்வளவு இனிமையானதோஅதைப் பெறுவதும் அவ்வளவு கடினமானதென்றபடிமாபெரும் விதையாய்...

முள்ளிப்பேரவலம்

குண்டு மழையில் ஆனது இதயம் துண்டு துண்டாய்இரத்த வெள்ளத்தை முன்மொழிந்தது யுத்த களம்.உறைந்தது உதிரம். ஆனாலும் ஓடிக்கொண்டிருந்தோம்.இறுதிக்கட்டம் என்பதை அறியாத உயிரற்ற உயிர்களாய்.ஒரு வாய் சோற்றுக்கு வழியில்லைதெரு தெருவாய் அலைந்தோம்.காத்திருந்தோம் இறைவா; நீவருவாயென வரந்தருவாயென.அவலம் நிறைந்த ஒரு காலம் அது.குண்டுகள் நம்மை...

இன்னும் போராடும் இசைப்பிரியா

இனவெறியை கர்ப்பம் தரித்துகொலைகளைப் பிரசவிக்கும் நிலமொன்றில்காணமுடியாத இருட்டில் தொங்கித் துடிக்கிறதுகூக்குரலின் ஆன்மாகுளம்பொலியில் வழியும்சனங்களின் துயரம்காலப் புரவியின் மீதேறி கனைக்கிறதுஊழி வாசல் பெருக்கியஅழுகையின் முற்றங்களாய்அகாலத்தில் கருகியது வாழ்வுகீழ்வானின் பறவைகளெனவெற்றிப்படையலாகவந்துவீழும் எறிகணைகள்பிரேதச் சான்றிதழோடு சவக்குழியிலிடுகிறது எம்மைபற்றியெரிந்த சதுப்பு நிலத்தில் ஊற்றெடுத்தயுகத்தின் துயரப் பாடலைநியாயப் பிரமாணங்களுக்கு வெகு தூரமாய்குருதிப்பிரியர்களால் துயிலுரியப்பட்டவள்அவயங்களைக் கீறிய மிருகங்களின் முகத்தில்காறி உமிழ்ந்து மரணத்தை அழைத்திருப்பாள்அநியாயத்தின் குரூரப் பற்கள்மானுடத்தின் தசைகளைத்...

பாலசந்திரா…

எத்தனை சோகத்தைதாங்குமோ எம் நெஞ்சம்.. ?அத்தனையும் ஒரு வடிவாய்எங்கள் இனக்கொழுந்தைவஞ்சனையால்கொன்றபோது…கோடி முறை இறந்தோம்..பால் மணம் மாறா பாலகன்..பாலச்சந்திரன்..தாயுள்ளம் கொண்டதலைவன் ஈன்றஇளம் சூரியன்…இதயத்தை பிடுங்கி விட்டுஉயிர் சுடரைபிடுங்கி வீசினர்..கொடிய மாந்தர்..இரக்கமில்லா உலகம்சாட்சியமானது..

சமர்க்கள நாயகனே!

புறநானுறை புத்தகத்தில் காட்டிடாமல்! நிஜத்தில் காட்டிய எங்கள் ஆசானே! புதுமைப் பெண்ணையும் நாம் பாரதியின் புத்தகத்தில் படித்துச் சுவைத்து சலித்திடவே.. தலைவனுடன் இணைந்து இத்தாவில் பெட்டிச்சமரில் காட்டிய வித்தகனே! சமர் பல வென்ற வெள்ளையத் தேவனே! சமர்க்களநாயகனே! எதிரியின் கோட்டைக்குள் தங்ககம் அமைத்து வாசம் செய்த தீரனே! மக்கள் மனதிலும் தங்ககம் அமைத்து நிரந்தரமாகக் குடியிருக்கும் இனியவனே! எதிரியும் புகழும் வல்லோனே! எங்கள் காலத்துச் செம்பியனே! நின் காலத்தில் யாமும் வாழ்ந்தது பெருந்தவப் பயனே! குறிப்பு–செம்பியன் என்பது சோழரின் இன்னுமோர்...

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்

உலகின் அத்தனை தட்டுக்களிலும்சம்மணம்போட்டு உட்கார்ந்திருந்தஅத்தனை கிண்ணங்களும்பலவித எண்ணங்களால்நிரம்பி வழிந்துகொண்டிருந்தன!வாழ்வெனும் விருந்துக்குஅங்கிருந்த அனைவரும்கட்டாய விருந்தாளிகள்!பித்துப் பிடித்து தேடியலையும்சுயநல விரல்களுக்கு…அப்படியொரு வெறி!போட்டிபோட்டு முண்டியடித்து…ஏந்திக்கொள்கின்றன கிண்ணங்களை!சில வாய்கள் சிரித்தபடியேசெங்குருதியை பருகிக்கொண்டிருக்கின்றன!வேண்டாமென ஒதுங்கிப்போகும்…ஒவ்வொரு நொடியிலும்,எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும்,மானிட விரல்களுக்குள்…திணிக்கப்படுகின்றன கிண்ணங்கள்!எந்தக் கிண்ணம்…? எப்பொழுது…?எவர் கரங்களில்…?என்பதெல்லாம்……. எவருக்கும் தெரிவதில்லை!அவசியமுமில்லை…!!எதை...

மாயை உலகம் – ஷாருதி ரமேஷ்

இந்த சமூகம் மாயையை உருவாக்கியுள்ளதுஅவர்களோடுஒன்றிப்போக உன்னை எதிர்பார்க்கிறார்கள்உனது தோலின் வழியாகஒரு திருப்பத்தை ஏற்படுத்திஅழகை உருவாக்கவிரும்புகிறார்கள்அழகு என்பதைபார்ப்பவர்களின்கண்கள் சொல்லும்ஆனால் பார்ப்பவர்களின்கண்கள் அழகினைப் பற்றிஎன்ன விவரிக்கும்கத்திரிக்கோலின்கருணையால் வெட்டப்படும்முடிகள் தரையில் இதழ்களாய் குவிகின்றதுஅவர்களை விடுங்கள்சிறு சிறு துண்டுகளாய்உடலினை வெட்டி வெட்டிகுவிப்பவர்கள் வேறெங்கும்உண்டாஉடல் தோற்றத்தில்நவீன வடிவமைப்பைமுகத்தில் நச்சுக்கழிவின்பூச்சைப் பூசிப் பூசிஉங்களின் இயற்கை...

தாய்மடி – புதுவை இரத்தினதுரை

எட்டாம் போர், பத்தாம் போர், பதினெட்டாம் போர் என வெள்ளையனையே கதிகலக்கிய வீதி இது.இன்று அந்தரத்தில் ஆடும் எங்கள் அவல வாழ்வை எண்ணி வீழ்ந்து எந்தப் பொழுதிலும் இடிந்து விடாதீர்கள். இன்றைய வதை பிரசவ வலியைப் போன்றது வலியைத் தாங்குவதே சுகப் பிரசவத்திற்கான வழி புதிய உயிர்ப்பொன்று வேண்டுமெனில் அதற்குப் பொறுமை வேண்டும்.பல்லைக் கடித்துத் தாங்கும் பக்குவம் வேண்டும். விடுதலைக்கான வழி...

வீரத் தெய்வங்களே வெளியே வருக….

கண்ணைப்பறிக்கும் மின்னல் வெட்டுக. கருமோகங்கள் கட்டிப்புரள இடியெழுக. பூமிகுளிர மழைபொழிக. கோபுரமணிகள் அதிர குத்துவிளக்குகள் ஒளிர கருவறைக் கதவுகள் திறந்து தெய்வங்கள் தெருவிலிறங்குக. தம்புரா வீணை மத்தளமேந்திய சாந்தசொரூபங்கள் சன்னதிக்குள்ளே தூங்கிக் கிடக்க. வேலும் வாளும் சூலமும் ஏந்திய வீரத்தெய்வங்கள் வெளியே வருக. புழுதி எழுத்துப்போய்ச் சூரியனைத் திரையிட கோபவிழிகள் குருதி நிறமாக தண்டையும் சிலம்பும் சப்திக்க சக்திகள் தாண்டவமாடுக. ஊழிக்கூத்து இதுவென உலகம் வேகமெடுத்துச் சுழல்க. பகைவனுக்கருள் செய் பாடுவோர் வேண்டாம் நாமார்க்கும் குடியல்லோம் நமனை ஆஞ்சோம் பாடிய நாவுக்கரசரே வருக. சகடை, தண்டிகை சாமரம் யாவும் எழுக. குடை கொடி ஆலவட்டம் தீவெட்டி வாகனக்கொம்பு கொடிமரமெல்லாம் குதிக்க. பூசையற்றுப் போனது...

போயகலும் பொல்லாப் பொழுது..

விடுதலைப் போரென்னும் தீரமிகு போர்க்களத்தில் வீழ்ந்து மடிந்தோரே! மண் பட்ட வேதனையை மாற்றத் துடித்தெழுந்து புண்பட்டு மண்ணில் பூவாய் உதிர்ந்தோரே! நெஞ்சுருகி உங்கள் நினைவைச் சுமக்கின்றோம் அஞ்சாத நெஞ்சோடு அந்நியர் தமைத் துரத்த வெஞ்சமர்கள் செய்தீர் வெற்றி பல கண்டீர் ஆனாதலு மந்தோ! அடைந்த பல வெற்றியெல்லாம் போனதென்ன மண்ணாய் புகழழிந்து தோற்றதென்ன?எங்கள் சரித்திரத்தை எழுதிடவே உங்களது செங்குருதி தன்னையன்றோ தீந்தையாய்த் தந்தீர்கள் சிதைந்த உடல்களன்றோ சித்திரங்களாயிற்று நீர்மேலெழுத்தாகி நிலைகுலைந்து உங்கள் புகழ் பார்மீதில் இன்று பழங்கதையாயப்...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்