IPKF – EPRLF கூட்டு கொலை, கொள்ளைகள்
Editor -
1988/89 இந்திய இராணுவ - ஈபிஆர்எல்எவ் கூட்டுக் கொலைகளும் கொள்ளைகளும் (பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் பிரபல கொள்ளைகள் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒன்றின் சிறு பகுதி இன்று 40 வயதை தாண்டியவர்களுக்கு நினைவுகள் பத்திரமாக இருக்கும்…..1988 ஆம் ஆண்டு கால கட்டங்கள், அப்போது என் வயது பத்து. இந்திய அமைதிப்படை என்ற பெயரில் எம் மண்ணில் வானரக்கூட்டங்கள்...
கிளி ஃபாதர்
Alias -
தமிழர்களின், அப்பழுக்கற்ற
தலைமகனை
தம் இதயத்தில்
சுமக்க
ஆர்வம் கொண்ட
எந்தவொரு மனிதருமே
தம் வாழ்வை அர்த்தமற்று வாழ்ந்து முடிக்க விரும்பியதில்லை.
அந்த தலைமகனை நேசிக்க தொடங்கிவிட்டாலே
தமிழ்ப்பற்றும்,
விடுதலையுணர்வும், ஓயாத உழைப்பும்,
அர்ப்பணிப்பு, ஆளுமைத்திறமை
மற்றும்
தம் மக்களுக்காக
உயிர்த்தியாகம் செய்யும் பெருவிருப்பு
உட்பட்ட
அநேக
பண்புகள் இயல்பாகவே வந்துவிடும்.
மற்றவர் முன்னால்
வெறும்
சாமானியர்களாக
இருந்த
பல ஆண்களும்
பெண்களும்
பெரும்
சரித்திரத்தை
படைத்ததன்
அடிப்படைச் சூத்திரமே
அதுதான்.
இங்கே,
தன் மக்களுக்காக
கடவுளிடம்
பரிந்து பேசும்
பணிக்காக
துறவியான
இந்த பெரியார்,
தான் விசுவாசித்த,
அவர் நேசித்த
கடவுளைப்போன்றே
தமிழர்களின்
தலைமகனையும்,
தமிழின விடுதலையையும்
நேசித்தார்.
அதற்காக
ஓயாமல் உழைத்தார்.
அதனால்
ஒடுக்கப்பட்ட மக்களின்
இதயங்களில்
அவர்
ஒரு விடுதலைப் போராளியாக
வீற்றிருக்கின்றார்.
தமிழரின்
விடுதலைக்காக உழைத்து
அதற்காகவே
தன்
உயிரை தியாகம் செய்த
ஆயுதம் ஏந்தாத,
சீருடை தரிக்காத
விடுதலைப் போராளியாக
தமிழர்களின்
மனங்களில்
என்றும்
நிறைந்திருக்கும்
தந்தையே
உங்கள் ஆன்மா
இளைப்பாற கடவட்டும்.
- ஆக்கம் –...
கொரானவை வென்ற கொடியவன்
Editor -
கோறோணாவால எழும்பி வந்த உடன நாய் பிச்சை எடுக்குது!போன வெள்ளி சுவிசில தன்ர சேச்சில நடந்த கூட்டத்தில் பிச்சை எடுக்கும் முறையை பாருங்கள்.மிசன் காணிக்கை - அதாவது உண்டியலில் போடும் காசு
சும்மா கையில் குடுக்குற காசு
உழைக்கிற சம்பளத்தில 10% இவருக்கு குடுக்கவேணும். அதை வங்கியில போடட்டாம்.இவனைச்சொல்லி குற்றமில்லை. சுவிசில இருக்கிற இவன்ர சபையை சேர்ந்த வலசுகள் திருந்தவேணும்.இண்டுவரைக்கும் யாழ்ப்பாணத்தில தன்னால பாதிக்கப்பட்ட...
தமிழரின் பரந்த மனமும் , மதம் பரப்பும் பாவிகளும்
Editor -
கல் மரம் சந்திரன் என்று கண்டதை எல்லாம் கும்பிடுவது தமிழரின் பரந்த மனம்அந்த பலவீனத்தை வைத்து மதம் பரப்பிறதுதா தமிழ் இனத்துக்கு செய்யும் ஆக பெரும் துரோகம்இடையில் ஆரியன் ஹிந்தீயம் என்றும் அவன் உன்னை அடிமையா வைத்திருக்கான் என்ற பழைய திராவிட உருட்டை வேற தட்டிவிட்டு ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் மதம் பரப்புவது இனியும் நடவாது.
உந்த ரீல் அறுந்து ரொம்ப...
சுவிஸ் பாஸ்டரும் நல்லா இருந்த யாழ்ப்பாணமும்
Editor -
'பாஸ்டர்' என்றால் ஏதோ பெரிய புடுங்கி என்ற நினைப்பு பல அல்லேலுயா சபைகளைச் சேர்ந்த மக்களுக்கு போல் சற்குணத்தின் சம்பவத்துக்குப் பின்னரும் தொடர்வதை அவதானிக்கிறேன்."நீங்கள் யாரை வேண்டுமானாலும் திட்டுங்கள் ஆனால் பாஸ்டர் பற்றி மட்டும் பேசாதீர்கள். அது பெரிய பாவம். இயேசப்பா எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்." என்று சிலர் உள்ப்பெட்டியில் வியாக்கியானம் வைக்கிறார்கள்.பாஸ்டர்மாரை யாரப்பா திட்டுறது? திட்டவேண்டிய அவசியம் என்ன? அந்த...
இது வெறும் வீடல்ல…பிரபா, கிட்டு, பொட்டுவின் நினைவுச்சின்னம்
Editor -
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட மாவீரர், முன்னாள் போராளிகள், செஞ்சோலைப் பயனாளிகள் முதலானோர் குடும்பங்கள் அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் சம்பவங்களால் அதிர்ந்து போயுள்ளன. தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பண்டிதரின் (சின்னத்துரை இரவீந்திரன்) தாயார் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த ஒருவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதேவேளை ஞானசார...
அவல தமிழரும் அநீதி தமிழரும்
Editor -
முள்ளிவாய்க்கால் கடைசி யுத்த நேரம் கஞ்சிக்காகவும் குழந்தைகளின் பாலுக்காகவும் வறுமையின் பிடியோடு வரிசையில் நின்று ஏம்பலித்தவர்களுக்கு கடைசியான மூன்று நாட்களில் பதுக்கி வைத்த முதலைகள் உயிரை மட்டும் பிடித்துக்கொண்டு துண்டக்காணோம் துணியக் காணோம் என ஓடிவிட, அங்கர் பால்மா தொடக்கம் அரிசியோடு கோதுமை மா எண்ணொய் என சிதறிக்கிடந்த கதையும் உண்டு.ஆட்டோ கொடுத்து அரிசி வாங்கியோரும் உண்டு.கஞ்சிக்காக கால்கடுத்து சுடுகஞ்சியோடு திரும்பிய...
ஈழ இனபடுகொலை சாட்சிகள்
Editor -
தாய் தன் பிள்ளையை அணைத்தபடியே இறந்துகிடந்தமை கண்ணுக்குள்ள நிற்கிறது.2009 பெப்ரவரி மாத முற்பகுதி, உடையார்கட்டு முன்பள்ளி ஒன்றிலே ஈழநாதம் இயங்கி வந்திருந்தது. நானும் ஜெகனும் வள்ளிபுனத்தில் அமைந்திருந்த குருகுலம் சிறுவர் இல்லத்திற்கு எங்களுக்கான மதியம், இரவு உணவு எடுப்பதற்கு சென்று வருவது வழமை. தற்காலிகமாக எங்களுக்கு குருகுலத்தில் இருந்தே சாப்பாடு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது, சுதந்திரபுரம் சந்திக்கும் வள்ளிபுனம் காளிகோவிலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அடிக்கடி...
சொல்லி வேலையில்லை..
Alias -
வீதியில் இருமருங்கிலும் மக்கள், தோளில் சிறுகுழந்தைகள் இருந்து கையசைக்க, முதியவர்கள், பெண்கள் என வயது வித்தியாசம் இல்லாது, ஆரவாரவொலி, ஓரிருவர் கைகளில்வெள்ளைக்கொடிகளும், பூக்களுமென, வேறும் சிலர், இனிமேல் எமக்கு விடிவுதான், கடவுளே, என்று இனி நிம்மதியாக இருக்கலாம் என்று தத்தம் மனஆசைகளை, அபிலாசைகளை இவர்கள் நிச்சயம் நிறை வேற்றுவார்கள் என்ற தொனியில் ஆணித்தரமான கருத்துப்பகிர்வுகள். இவ்வளவும் இந்திய அமைதிப்படை, Indian Peace...
தமிழ் மொழியும், எம் பிள்ளைகளும்
Alias -
தாய் மொழி என்பது ஆங்கிலத்தில் mother tongue என்பர். ஆங்கில அகராதியில் ஒரு பிள்ளை வளரும் பருவத்தில் பேசப்பட்ட மொழி என்கிறார்கள்.(The language which a person has grown
up speaking from early childhood). ஆராட்சியாளர்கள் ஒரு குழந்தைக்கு இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை பேசவும், கற்கவும் ஆளுமைஉள்ளது என்கிறார்கள். ஆனால் எம்மவர்களோதமிழைப் படிப்பித்தால் ஆங்கிலம் சரியாக கற்கமுடியாமல் போய்விடும்...