Home போனதெல்லாம் கனவினைப்போல்..

போனதெல்லாம் கனவினைப்போல்..

முள்ளிவாய்க்கால் கரையோர நினைவுகளை கடந்து…

தமிழ் மக்கள் தமது தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற அடிப்படை கோட்பாடுகளை முன்வைத்து நகர்ந்த, ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டத்தின் முடிவில், பலத்த அழிவையும் இழப்பையும் சந்தித்தபோதும், அந்த போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் அதன் நோக்கத்தையும் தேவையையும் வலியுறுத்தியதாக அதன் பின்னான பத்து ஆண்டுகளின் முடிவில் தமிழர் தேசம் நிற்கின்றது.எதிரியை விட பல மடங்கு குறைவான சனத்தொகை, அதிலிருந்து உருவான படைப்பலம், சர்வதேச...

முள்ளிவாய்க்கால் முடிவில்லா துன்பம்

Kumaran Karanஅன்று 08.04.2009எனக்கு நல்ல ஞாபகம்…அன்று எனக்கு தெரிந்தவகையில்10 தடவைகள் என நினைக்கிறேன்..காலை வேளை பச்சப்புல்மோட்டையில் தொடங்கி…ஆனந்தபுரம்பகுதிகளில் நடாத்தப்பட்ட கிபிர் தாக்குதல்….நானும் ..மாங்குயில் அண்ணையும் மாட்டியது..அது தனி…அன்று மாலை வரை தப்பிய நான் மாலை வேளை தான் சிறு காயம்…நாங்கள் இருந்த பங்கருக்கு பக்கத்தில் கிபிர் அடித்து ..அதன் சிதறல் தென்னங் குற்றியை சிதைக்க அதன் சிதறல்கள் என் பின் பக்கமெங்கும்...

முள்ளிவாய்கால் வலி சுமந்த இறுதி கணங்கள்

2009 ஆண்டின் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளர்களில் அன்பரசன் என்பவரும் முக்கியமானவர். சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “எறிகணைத்தாக்குதல் இடம்பெறும் சமயத்தில் நீங்கள் வீடியோ எடுக்கவேண்டாம் படுங்கோ” என்று சொல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வீடியோ காட்சியினை அன்பரசனே எடுத்திருந்தார். அன்பரசனின் அனுபவங்களை இங்கே பதிவுசெய்கின்றேன்.அன்றைய நாட்களில்...

முள்ளிவாய்க்கால் 11 ஆண்டுகள், வெறும் பானையில் அகப்பை கிண்டுகிறோம்..

முள்ளிவாய்கால் இனப்படுகொலை பேரவலம் நடந்தேறி 11 ஆண்டுகளாகிறது. ஆனால் இவ்வாண்டுகளில் தான் எதுவுமே மாறிவிடவில்லை. மே 18இல் ஏதோ ஒரு விளக்கை ஏற்றிவிட்டால் எமது கடமை முடிந்தாகிவிட்டது என்றாகிவிட்டது. தேசியம் என்ற போர்வையில் சம்பிரதாய சடங்குகளுக்கு அழைப்பு விடுபவர்களுக்கு மட்டும் பஞ்சமேயில்லை.சாதாரண மக்களின் இவ்வாறான செயற்பாட்டு முன்னெடுப்பை தமது வருடாத்த பெரும் செயல்வடிவமாகக் காட்டிக் கொள்வதில் தான் எத்துனை மகிழ்ச்சி இவர்களுக்குப்...

அன்னையர் தினத்தில் இனப்படுகொலையான அம்மாக்களின் நினைவுகள்

“அம்மா என்றவுடன் நினைவுக்கு வருவது இச்சம்பவமே. ‘நான் அந்த அம்மாவை தூக்கியிருந்தால் உயிர் தப்பியிருப்பார். நான் இறந்துவிட்டார்’ என எண்ணியே அவ்விடத்தினை விட்டு சென்றிருந்தேன். சில மணித்தியாலங்கள் கழித்து அந்த அம்மாவை தூக்கும் போது உயிர் இருந்தது. கொஞ்ச நேரத்தில் என்ர மடியிலேயே அவர் இறந்துபோன நினைவுகள் என்னை விட்டு இன்னும் அகலவில்லை.”தைப்பொங்கலுக்கு பிறகு தான் விசுவமடுவில் இருந்து உடையார்கட்டு பகுதிக்குச்...

இதுதான் அந்த இடம்…

இதுதான் அந்த இடம்எம் லட்சம் மக்களை கொன்ற இடம்எம் மக்களின் கண்ணீரும் செந்நீரும்கலந்துவிட்ட முள்ளிவாய்க்கால் இடம்.எம் ஜனங்களின் அழுகுரல் ஓலம்கலந்த காற்று வீசும் இடம் இது.இங்கு படர்ந்து இருக்கும் வெறுமையில்எம் இனம் பட்டதுயர் நாம் அறிவோம்முன்னர் முள்ளிவாய்க்காலை கடக்கையில்அத் தண்ணி எடுத்து வற்றாபளை அம்மனுக்குவிளக்கு எரிப்பது நினைவுக்கு வரும்இனி முள்ளிவாய்க்காலை கடக்கையில்எம் ஆயிரம் விளக்குகள் அணைக்கப்பட்டதுநினைவில் வந்து தொலைக்குமே!விஷவாயுவால் உருக்குலைந்தவர் எத்தனை?ஷெல்...

ரத்தம் வெவ்வேறு நிறம்

அங்கேபிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றனநாம்‘எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன? என்றுவிசாரித்துக்கொண்டிருக்கின்றோம்.அங்கேகுண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றனநாம்பட்டாசு வெடித்துப்பரவசப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.அவர்கள்வேட்டையாடப்பட்டுக்கதறிக்கொண்டிருக்கின்றார்கள்நாம்வெள்ளித் திரைகளுக்கு முன்விசிலடித்துக்கொண்டிருக்கின்றோம்.அவர்கள்கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்நாம்‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?” என்றுபட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்.அவர்கள்வெளிச்சத்தின் விளைச்சலுக்குரத்தம் சொரிந்துகொண்டிருக்கின்றார்கள்நாம்இருட்டுக்காடுகளுக்குவேர்வை வார்த்துக்கொண்டிருக்கின்றோம்அவர்கள்சயனைட் அருந்திக்கொண்டிருக்கின்றார்கள்நாம்அதர பானம் பருகிக்கொண்டிருக்கின்றோம்இதில் வியப்பேதும் இல்லை.அவர்கள் கவிரிமான்கள்நாம் கவரிகள்.இதோதேவவேடம் போட்ட சாத்தான்கள்வேதம் ஓதுகின்றனர்.இதோரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்நீரைக் கலக்கிய பழியைஆடுகளின்மீது சுமத்திக்கொண்டிருக்கின்றன.இதோசித்தாந்த வித்துவான்கள்ஒப்பாரியில்ராகப் பிழை கண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.இதோவெள்ளைக்கொடி வியாபாரிகள்விதவைகளின் புடவைகளைஉருவிக்கொண்டிருக்கிறார்கள்.அன்றுஅசோகன் அனுப்பியபோதிமரக் கன்றுஆயுதங்கள் பூக்கின்றது.இன்றுஅசோகச் சக்கரத்தின்குருட்டு ஓட்டத்தில்கன்றுகளின் ரத்தம்பெருகிக்கொண்டிருக்கின்றது.தாய்ப்...

முள்ளிவாய்க்கால்..நினைவுகளை மீட்டும் காலம்

தருணம் 19ஒரு கிலோமீற்றர் நடைக்கு பின்னர் அம்மாவை கண்டுவிட்டேன் அம்மா எமக்கு முன் அந்த இடத்தை கடந்தமையால் நாம் முன்னே சென்றுவிட்டோம் என எண்ணி கடற்கரையின் மறுபக்கமாக நடந்து மீண்டும் நாம் வந்த இடம்நோக்கி நடந்துகொண்டிருந்தார் அந்த தருணத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சு வெடித்து எழும் வலி துயரமாக தாக்குகின்றது என்னை .தனுக்கு தேவையான ஒருசில பொருட்களை ஒரு சிறியபையில் போட்டு...

என்றும் தலைவர் நினைவில்…

இத்தனை வருடங்களுக்கு பின்னும் ஈழவிவகாரம் பற்றி பேச வேண்டுமா என்கிறார்கள் சிலர், அது பக்கத்து நாட்டு பிரச்சனை என்கிறார்கள் சிலர். கொரோனா எனும் நோய்த்தொற்று உலகில் உயிர்களை கொல்ல துவங்கியதும் இந்தியா மருந்துகளை அனுப்புகிறது, கியூபா மருத்துவர்களை அனுப்புகிறது.இப்படி உலகம் உயிருக்கு பதறும் கால கட்டத்தில், ஒன்னரை லட்சம் உயிர்களை எளிதாய் கொல்ல முடிந்ததென்றால் அது வெறும் ஈழத்தமிழர் விவகாரமல்ல, ஒட்டுமொத்த...

தலைவன் பிரபாகரனின் அறம்

பிரபாகரன் கொலையாளி, பிரபாகரன் வன்முறையாளன், பிரபாகரன் போராளியை நஞ்சு வைத்துக் கொன்றார் என்றெல்லாம் அலப்பறைகள் எழுந்தமானமாகப் பரவுகின்றன. தமிழகத்தின் சிலதரப்புகளும், அவர்களோடு கைகோர்த்த இலங்கைத்திருநாட்டின் முத்துமணிகளும் இட்டுக்கட்டப்பட்ட இவ்வாறான தகவலை, வலைத்தளங்களில் ஆசைஆசையாக் காவிக்கொண்டு ஓடித்திரிகிறார்கள்.நந்திக்கடலிலில் நடந்த இறுதிப்போர் பற்றி எழுதிய கமால்குணரட்ண ; " தனது கட்டளைக்காகச் சண்டையிடவென்று, மனவுறுதி தளராத போராளிகளை எவ்வாறு பிரபாகரன் உருவாக்கியிருப்பார்.." என்று அடிக்கடி...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்