தாய் நாடு

சின்ன வயது சினிமாப்படங்கள்

சினிமாப் படங்களைப் பார்ப்பதில் ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. இன்று வீட்டில் இருந்தபடியே விரும்பிய படத்தை விரும்பிய நேரத்தில் தொலைக்காட்சியை இயக்கிப் பார்க்கின்றோம்.தொலைக்காட்சிப் பெட்டிகளே இல்லாத அந்த நாட்களில் எங்கள் பள்ளிக் காலத்தில் தியேட்டர்களில் சென்று தான் படம் பார்க்க முடியும். தியேட்டர்கள் என்றால் அது நகரப் புறத்தில் தான் இருக்கும். 1960களை ஒட்டிய பின்னைய காலங்களில் யாழ்ப்பாணத்தில் பஸ் நிலையத்தையொட்டி ராணி...

எங்கள் பனை வளமும் ஒடியல் கூழும்

அண்மையில் ஊர் சென்று வந்த நண்பர் தன் தாயக பயண அனுபவங்களைச் சொன்னார். கொடியேற்றம், தேர், தீர்த்தம், திருவிழா, வேள்வி, பங்கு இறைச்சி, கூவில்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்த அவரின் முகத்தில் திடீர் சுழிப்பு. என்ன என்றேன்.என்ன இருந்தாலும் அந்த நாளைப்போல ஒரு வீட்டிலும்கூழைக் காண முடியவில்லை. பனையும் குறைந்து விட்டது. இவைகளும் எங்கோ போய்த் தொலைந்து விட்டன என்று...

இது விதைப்புக் காலம்

புரட்டாதி பிறந்தாலே உடன் நினைவுக்கு வருவது வன்னி வயல் விதைப்புத்தான். இதுதான் விதைப்புக்குரிய காலம். பருவத்தே பயிர் செய் என்பதற்கமைய கமக்காரர்கள் நெல்லை மொழியாக்கி பயிராக பச்சயம் தெரிய வைக்க கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்ற காலம் இது.சோற்றுக்குள் கையை வைத்து சுவைத்து உண்ணுகின்றோம். அந்த சோற்றுக்குக் காரணமான நெல்லை விளைவிக்க சேற்றுக்குள் கமக்காரர்கள் படும்பாட்டை அனுபவித்துப் பார்ப்போருக்குத்தான் தெரியும். 17 ஆண்டுகளுக்கு...

முடங்கிப் போகும் சடங்குகள்

அண்மையில் உற்ற நண்பரது வீட்டில் பூப்புனித நீராட்டுவிழா நடந்தது. வழக்கம் போல 11 மணிக்கு வரும்படியாக அழைப்பிதழில் குறிப்பு இருந்தது. வந்தவர்கள் தங்கள்தங்கள் மேசையை சுற்றி இருந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள். சற்று முன்னதாக 12 மணியளவில் தான் பூப்புப் பெண் வீடியோகாரரின் படப்பிடிப்புக்கமைய மண்டபத்திற்கு வருகை தந்தார். குத்துவிளக்கு ஏற்ற நின்றபெற்றோருக்கும் வீடியோ காரன் தான் சைகை காட்டி கட்டளைகளை இட்டுக்...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்