சென்னையில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 22,149 நோய் தொற்று ஏற்பட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நிச்சயம் இது சமூக பரவலை எட்டிய புள்ளி விபரமாக இருக்கக் கூடும். சென்னையில் இன்று வரை மேற்கொள்ள மொத்த பரிசோதனை 1,21,950 என சொல்லப்படுகிறது.
சென்னை மக்கள் தொகைக்கு இந்த பரிசோதனை புள்ளி விபரம் என்பது போதாதது தான்.. பரிசோதனையை தீவிரப்படுத்தினாலும் ஒட்டு மொத்த தீர்வு கிடைக்குமா என்றால் சந்தேகம் தான்.. காரணம் தற்போது பரிசோதனையில் நெகட்டிவ்வாக இருப்பவர்களுக்கு அடுத்து தொற்று ஏற்படாது என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.. அப்படியென்றால் எடுத்தவர்களுக்கே திரும்ப எடுக்க முடியுமா? குணமடைந்தவர்களுக்கு திரும்ப வராது என்ற நிச்சயம் உண்டா எனில் அதுவும் இல்லை.. ஓட்டை பானையில் தண்ணீர் ஊற்றிய கதை தான்..
எதிர்வரும் வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாகவே சென்னையை கட்டுபடுத்த வேண்டிய அவசியமாகிறது. அப்படியென்றால் நம்மிடம் இருக்க கூடிய ஆயுதமாக கருதப்படுவது சமூக இடைவெளி & லாக்டவுண் தான். ஆனால் சென்னையை பொறுத்தவரை இந்த இரண்டும் கேலிப் பொருளாகப்பட்டது. மக்கள் எது குறித்தும் அச்சப்படவில்லை.
அப்படியென்றால் அடுத்து என்ன தான் செய்ய வேண்டும் …
சென்னையிலிருந்து குறிப்பிட்ட சதவீத மக்களை, விருப்பத்தின் பேரில் சொந்த மாவட்டங்களுக்கு வெளியேற்ற வேண்டும் … தீபாவளி & பொங்கல் பண்டிகைகளுக்கு சிறப்பு பேருந்தில் அனுப்புவது மாதிரி… குறிப்பிட்ட கால இடைவெளியில், அதிக பேருந்துகளில் சமூக இடைவெளியுடன், இலவச பேருந்து கட்டணத்தில் அனுப்பி வைக்க வேண்டும் …
அதற்கு முன்பாக, அந்தந்த மாவட்டங்களில் துல்லியமான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கட்டாயம் செய்ய வேண்டும் .. அதாவது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரும் மக்களை அந்தந்த மாவட்ட கல்வி நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகளில் தங்க வைத்து PCR Test செய்து, பரிசோதனை முடிவின் அடிப்படையில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் .. நோய் தொற்று இருப்பவர்களை மட்டும் மருத்துவமனையில் சேர்க்கலாம் .. இதன் மூலம் சென்னை மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து நெருக்கடியை தவிர்க்கலாம் ..
அடுத்து, ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அனைவரையும் அவரவர் மாவட்டங்களில் அல்லது சென்னையில் அவர்களது வீட்டிலே Work from Home மூலம் பணி செய்ய நடைமுறைப்படுத்த வேண்டும் .. சென்னை வாசிகளில் 30% ஐ டி துறை சார்ந்தவர்கள் & அவர்களது குடும்பத்தினர் தான் .. இதன் மூலம் நெருக்கடிகள் குறையும் ..
இப்படி பல வழிமுறைகளை ஆராய்ந்து குறிப்பிட்ட சதவீதம் மக்களை தற்காலிகமாக வெளியேற்றுவதன் மூலம் சென்னையில் மக்கள் நெரிசலை, நோய் தொற்று நெருக்கடியை, சிகிச்சை குறைபாடுகளை ஒரளவிற்கு நிவர்த்தி செய்ய முடியும் என நினைக்கிறேன். இதில் கூட நடைமுறை சிக்கல்கள் இருக்க கூடும், மறுக்கவில்லை.. ஆனாலும், தற்போதைய அவசரத்திற்கு இது தான் தீர்வாக இருக்க முடியும் என கருதுகிறேன்.
நன்றி மருதம்